உதயநிதி ஜாலியா இருந்தார்.. இப்போ "சேப்பாக்கம் சேகுவேரா" எங்கே?.. சட்டசபை போரடிக்குது.. சீண்டிய மாஜி
உதயநிதி குறித்து ஜெயக்குமார் மீண்டும் விமர்சனம் செய்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை திரைப்படத்தில் ஜாலியா இருந்த ஒரு மனுஷன்.. அவரை வலுக்கட்டாயமாக இந்த சட்டமன்றத்தில் உட்கார வைத்தால், எப்படி இருக்கும்? சட்டமன்றம் போரடிக்கத்தான் செய்யும்" என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி திமுக வாக்குறுதி தந்தது.. நீட்டுக்கு விலக்கு பெற அதிமுக ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது..
ஆனால் மாணவர் சமுதாயத்தை திமுக ஏமாற்றிஉள்ளது.. திமுக அளித்த வாக்குறுதியை நம்பி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை.. அதிமுக ஆட்சியில் இருந்த சட்டத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் தான் இப்பவும் இருக்கிறார்கள்..

உதார்நிதி ஸ்டாலின்
அவர்கள் தான் அப்போதும் நீட்டுக்கு எதிரான சட்ட முன்வடிவை தயாரித்தார்கள்... இப்போது நீட்டிலிருந்து விலக்கு பெற்று விட முடியுமா? தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.. உதயநிதி ஒரு உதார்நிதி.. நீட்டுக்கு எதிராக அன்னைக்கு அவ்வளவு பேசிய உதயநிதி, இன்னைக்கு எங்கே போனார்? நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பு.. தயவு செய்து மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.. என்று கூறியிருந்தார்.

பேட்டி
இந்நிலையில், இன்று மீண்டும் உதயநிதி குறித்து விமர்சித்து பேட்டி தந்துள்ளார் ஜெயக்குமார்.. பேரறிஞர் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.. அப்போது சட்டப்பேரவையில் உதயநிதி போரடிக்குது என்று சில தினங்களுக்கு முன்பு பேட்டி தந்திருந்தாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

விமர்சனம்
அதற்கு ஜெயக்குமார் பதிலளித்து பேசும்போது, "சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு சிறந்த பதவி.. மக்கள் வாக்களித்து, ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால், உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருந்து, அந்த மக்களுக்கு நல்லது செய்து, அதே நேரத்தில் சட்டமன்றத்தில் பல பிரச்சனைகளை எழுப்பி, அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடம்தான் சட்டமன்றம்.

பதவி
இப்படிப்பட்ட சட்டமன்றத்துக்கு தியாகம் செய்து, போராட்டம் செய்து, அரசியலில் நீண்ட நாட்களாக இருந்து, மக்களின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து போனால், நிச்சயம் அந்த சட்டமன்ற பதவி என்பது ஒரு பெரிய பதவியாக தெரியும்.. ஆனால், இவரை பொறுத்தவரை திரைப்படத்தில் ஜாலியா இருந்த ஒரு மனுஷன்.. அவரை வலுக்கட்டாயமாக இந்த சட்டமன்றத்தில் உட்கார வைத்தால், எப்படி இருக்கும்? சட்டமன்றம் போரடிக்கத்தான் செய்யும்.
Recommended Video

சேகுவேரா
அவரை பொறுத்தவரையில் மக்களை பற்றி எல்லாம் கவலை இல்லை.. இவருக்கு சட்டமன்றம் என்பது ஒரு போரடிக்கும் விஷயமாக இருக்கிறதென்றால், உண்மையிலேயே வாக்களித்த அந்த சேப்பாக்கம் தொகுதி மக்களுடைய அந்த எண்ணங்களை சிதைக்கும் வகையிலும், சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையிலும்தான் இதை நிச்சயம் அனைவரும் பார்ப்பார்கள்.. "சேப்பாக்கம் சேகுவேரா" இன்றைக்கு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை" என்றார்.

ட்வீட்
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார்.. மத்திய அரசை நடத்துகின்ற அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை, அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கழக அரசை குறை சொல்வது வெற்று அரசியல் மட்டுமே" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்வீட்
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார்.. மத்திய அரசை நடத்துகின்ற அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை, அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கழக அரசை குறை சொல்வது வெற்று அரசியல் மட்டுமே" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications