இன்று தமிழ் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு! 22 லட்சம் மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர கடந்த சில ஆண்டுகளாகவே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' (NEET) நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்பதால் விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசியத் தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை நடத்துகிறது. கவுன்சலிங், மேனேஜ்மெண்ட் கோட்டா என எதுவாக இருந்தாலும் நீட் தேர்வில் குறைந்தபட்ச கட் ஆஃப் பெற்றால் தான் கல்லூரிகளில் சேர முடியும். மாணவர்களின் மருத்துவ கனவை முடிவு செய்யும் இந்த நீட் நுழைவுத் தேர்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.

neet

இந்தாண்டு இதுவரை இல்லாத அளவில் இந்தத் தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை என மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.. மொத்தம் 180 கேள்விகள் இடம்பெற்று இருக்கும். 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி MCQ வினாக்கள் கேட்கப்படும். 720 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும், தவறான விடை அளித்தால் 1 மதிப்பெண் கழிக்கப்படும் என்பதால் மாணவர்கள் கவனமுடன் விடையளிக்க வேண்டும்.

தேர்வறைக்குள் செல்லும் முன் மாணவர்கள் தீவிரத் தணிக்கை மற்றும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஆடை கட்டுப்பாடு (Dress code) மற்றும் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் குறித்து என்.டி.ஏ ஏற்கனவே விரிவான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. எனவே, தேர்வு மையத்திற்குச் செல்லும் முன்பு அதைக் கவனமாகப் பின்பற்றுவதே சரியாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீட் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வைச் சுமுகமாக நடத்தவும் தேசிய பாதுகாப்பு முகமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+