தமிழ்நாட்டில் 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்.. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் .காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் பட்ஜெட்
காலை 10 மணி முதல்மதியம் வரை சுமார் 3 மணி நேரம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். பொதுமக்கள் எதிர்பார்த்த பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு பல்வறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீன்வளத்துறை
பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீனவர்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை இப்போது காண்போம். மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீன்பிடித்துறைமுகங்கள்
புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கருத்து
ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அரசியல் தலைவர்களும் பட்ஜெட் குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications