சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு மீண்டும் மழை.. வானிலை மையம்!

தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகா புயல் தமிழகத்தை தாக்காமல் குஜராத் பக்கம் நகரத்து சென்று இருக்கிறது. இதனால் குஜராத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த வாரமாக நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரமாக அடைய தொடங்கி உள்ளது.

மழை பெய்கிறது

மழை பெய்கிறது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

புதுசு

புதுசு

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளது. இன்று இரவு இந்த தாழ்வு நிலை உருவாகும்.

வலிமை அடியும்

வலிமை அடியும்

இது கொஞ்சமா கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே செல்லும். இன்னும் இரண்டு நாட்களில் இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும். வலிமை அடைந்து கொண்டே சென்று இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி ,அரியலூர், மதுரை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

English summary
New Pressure Depression will form tomorrow in the Indian Ocean: Again Rain for Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X