டிட்டோ முதல்வன் படத்துல மாதிரியே.. அனுபவம் + இளைஞர் படை! லீக்கான தவெக விஜய்யின் அமைச்சரவை பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்பாராத ஒரு மாற்றத்தை தமிழ்நாடு அரசியல் சந்தித்து இருக்கிறது. 10 சதவீத வாக்குகள் வாங்குவாரா? என எதிர்பார்க்கப்பட்ட விஜய் திடீரென 17 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளார். இந்த நிலையில் ஆளுநரை ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் இமெயில் மூலம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் அமைச்சரவை அமைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது அது தொடர்பான ஒரு பட்டியல் தமிழக வெற்றி கழகம் வட்டாரங்களில் லீக் ஆகி உள்ளது. புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட பிரபலங்களோடு மதுரையில் கல்லாணை, காரைக்குடி பிரபு, திருப்பூர் சத்தியபாமா, ஆர கே நகர் மரிய வில்சன் உள்ளிட்டோரது பெயர்கள் இந்த பட்டியலில் இருக்கிறது.

Vijay cabinet list

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அமைச்சர் என்ற வகையில் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், தவெக வென்ற மாவட்டங்களில் ஒருவர் அமைச்சராக வாய்ப்புள்ளது. வெல்லாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தவெக விஜய்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் விஜய். அவரது தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது அமைச்சரவை அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.

விஜய் அமைச்சரவை

சென்னையின் பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், புதிய அரசை அமைப்பது குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முதல் கட்டமாக சுமார் 20 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கட்சியின் முக்கிய வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

யாருக்கு பதவி?

அதன்படி, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், வி.எஸ். பாபு, மரிய வில்சன், திலகபாமா, ஆதவ், சீமானை தோற்கடித்த பிரபு, ராஜ்மோகன் உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அனுபவம் மற்றும் இளைஞர்கள் என கலந்து இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சி

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம் என்னவென்றால், தமிழ்நாடு நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டணி ஆட்சியை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது. 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விடச் சற்றே குறைவாக தவெக பெற்றுள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவு அவசியமானதாகியுள்ளது. இதனால், கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ்

குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரசுக்கு 2 அமைச்சரவை இடங்கள் வழங்கப்படலாம் என்றும், சிறிய கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 4 முதல் 6 அமைச்சரவை இடங்கள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அமைச்சரவை பட்டியல்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச அமைச்சர்கள் பட்டியல் (ஒரு பகுதி) என தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு பட்டையலை பகிர்ந்து வருகின்றனர். அதில்,

1. என்.ஆனந்த் - தி.நகர்
2. அருண்ராஜ் - திருச்செங்கோடு
3. செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம்
4. ஆதவ் அர்ஜுனா - வில்லிவாக்கம்
5. சி.டி.ஆர்.நிர்மல்குமார் - திருப்பரங்குன்றம்
6. தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு
7. ஈ.சி.ஆர்.சரவணன்
8. முகமது பர்வேஸ் - அறந்தாங்கி
9. விஜய் சரவணன் - தஞ்சாவூர்
10. கல்லாணை - மதுரை வடக்கு
11. விஜயலட்சுமி - குமாரபாளையம்
12. Dr. TK பிரபு - காரைக்குடி
13. பாலாஜி - ஈரோடு கிழக்கு
14. சத்யபாமா - திருப்பூர் வடக்கு
15. ராஜ்மோகன் - எழும்பூர்
16. ஜே.சி.டி.பிரபாகர் - ஆயிரம்விளக்கு
17. வி.எஸ்.பாபு - கொளத்தூர்
18. சம்பத்குமார் - கோவை வடக்கு
19. மரிய வில்சன் - ஆர்.கே.நகர்
20. சபரிநாதன் - வில்லிவாக்கம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றியடைந்த ரமேஷ், சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றியடைந்த கிரி பிரசாத் போன்ற சிலரும் அமைச்சரவையில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+