சட்டசபைக்கு செல்லும் 22 சிங்கப்பெண்கள்.. லீமா ரோஸ் மார்டின் முதல் பிரேமலதா வரை.. யார் யார்? முழு லிஸ்ட்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 22 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் மார்டின், தவெகவின் சத்யபாமா, பாமக சவுமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்பட 22 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்கின்றனர். இதில் விஜய்யின் தவெக சார்பில் மட்டும் 13 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்கின்றார்கள்.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. எஸ்.ஐ.ஆர் திருத்த பணிக்கு பிறகு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 85 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவானது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.

22 பெண் வேட்பாளர்கள்
நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக சாதனை படைத்துள்ளது. திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2026 சட்டசபை தேர்தலில் மொத்தம் 22 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். கட்சி அடிப்படையில் என்று பார்க்கும் போது தவெகவில் இருந்து மட்டும் 13 பெண்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.
தவெக - 13 பெண் எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி சார்பில் 13 பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர். திமுகவில் ஒரு பெண் எம்.எல்.ஏ கூட வெற்றி பெறவில்லை. அதிமுக சார்பில் 6 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபை செல்ல இருக்கின்றனர். தமிழக சட்டசபைக்கு செல்லும் பெண் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரம் பின் வருமாறு:-
1. காயல்விழி - 1,33,611
2. பல்லவி - 69,125
3. தஹீரா - 90,728
4. சித்ரா - 82,858
5. ஜெயலட்சுமி - 81,179
6. தமிழ் செல்வி - 72,391
7. கமலி - 84,058
8. சத்யபாமா - 1,31,401
9. கவிதா சந்தோஷ் - 1,46,466
10. சத்யா - 62,378
11. குமுதா - 72,601
12. ஜெயந்தி - 65,548
13. கீர்த்தனா - 68,709
அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள்
* லீமா ரோஸ் மார்டின் - 60,795 - லால்குடி
* மரகதம் குமரவேல் - 69,284 - மதுராந்தகம் (தனி)
* சத்தியபாமா - 81,100 - தாராபுரம்
* மரகதம் வெற்றிவேல் - 1,01,829 - பாப்பிரெட்டிப்பெட்டி
* உஷா ராணி - 87,772 - ஏற்காடு (தனி)
* ஜெயசுதா - 76,735 - ஆரணி

பாமக (அன்புமணி ராமதாஸ்)
* சவுமியா அன்புமணி - 93,713 - தர்மபுரி
தேமுதிக
* பிரேமலதா விஜயகாந்த் - 69,351 - விருத்தாசலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
* லதா - 56,108 - கீழ்வேளூர்
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications