46 தனித் தொகுதிகளில் 24ல் தவெக ஆதிக்கம்.. சரிந்த திமுக, அதிமுகவின் கோட்டை.. விசிகவுக்கும் சேதாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 46 தனித் தொகுதிகளில் தவெக மட்டும் 24 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தனித் தொகுதிகளில் தலா 9 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். இதன் மூலமாக தவெக அனைத்து தரப்புக்குமான கட்சி என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தவெக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வென்றுள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக அதிரி புதிரி வெற்றியை பெற்றுள்ளது.

Vijay

விஜய் சுனாமி இந்த தேர்தலை தாக்கியதாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். அதேபோல் இந்தத் தேர்தலில் தவெக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. அதாவது தனித் தொகுதிகளில் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கை உடைத்து தவெக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 46 தனித் தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 24 இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் எளிய பின்னணியில் இருந்து வந்து வென்றிருக்கிறார்கள். கடந்த காலங்களில் தனித் தொகுதிகள் என்பது திமுக மற்றும் அதிமுக-வின் கோட்டைகளாகக் கருதப்பட்டன.

ஆனால் இந்தத் தேர்தலில், இவ்விரு கட்சிகளும் தலா 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. அதாவது, பாரம்பரியக் கட்சிகளின் செல்வாக்கு இந்தத் தொகுதிகளில் பாதியாகக் குறைந்துள்ளது. விஜய்யின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கை மற்றும் சமூக நீதி சார்ந்த முன்னெடுப்புகள் தலித் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் உள்ள பெரும்பாலான தனித் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பலத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே 50% க்கும் அதிகமான தனித் தொகுதிகளைக் கைப்பற்றுவது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

திராவிடக் கட்சிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் தவெக மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் சாதி மத பேதமின்றி விஜய்க்கு வாக்களித்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தனித் தொகுதிகளில் கிடைத்துள்ள இந்த வெற்றி, தவெக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான கட்சி அல்ல, அது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக மாறியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+