Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேற்று வந்தவர்களுக்கு கோட்டையில் இடம்.. எங்களுக்கு இதயத்தில் மட்டும் இடமா? OG உடன்பிறப்புகள் குமுறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தேர்தலில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கி வருகிறது திமுக தலைமை. அதே நேரத்தில் அவர்கள் கேட்ட தொகுதிகள், கட்சியில் பதவிகள் என வாரி வழங்கி வருகிறது திமுக. இதனால் திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்த உடன்பிறப்புகள் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

திமுக அமைச்சர்களின் ஏற்பாட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகி வருவது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், சுப்புரத்தினம் வரிசையில் தற்போது வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள் பட்டியல் நீண்டு வருகிறது. தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சியிலும் ஆட்சியிலும், குறிப்பிட்ட தகுந்த அளவு இடத்தை அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தான் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

mk stalin dmk Tamil Nadu Assembly Election 2026

அதிமுகவில் இருந்து திமுக

அமைச்சரவையை பொறுத்தவரை முத்துச்சாமி, ரகுபதி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எவ வேலு, பிகே சேகர் பாபு ஆகியோர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதிமுகவில் இருந்து அமமுக சென்று அதற்கு பிறகு திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் திமுகவில் இருக்கும் அமைச்சர்களில் 3ல் ஒருவர் அதிமுகவில் இருந்து வந்தவராகக் கூட இருக்கலாம்.

திமுக புகைச்சல்

இதுதான் இப்போது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் விஐபிக்கள் கட்சியை பலப்படுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வருவதில்லை என்று வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். அவர்கள் திமுகவில் இணைவது கொள்கை அரசியலுக்காக அல்ல; தங்களது சொத்தையும், அரசியல் செல்வாக்கையும், எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ளவே என குற்றம்சாட்டுகின்றனர்.

பாரம்பரிய திமுக

இதன் விளைவாக, பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த பாரம்பரிய திமுகவினரின் தேர்தல் வாய்ப்புகள் கண்முன்னே நழுவிக் கொண்டிருப்பதாக வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த மனநிலையை வெளிப்படுத்தும் வகையில், பேசிய சில திமுகவினர்," இப்போது கட்சியில் வரிசையாக வந்து சேரும் பெருந்தலைவர்கள் அனைவரும், கட்சியில் இணையும் முன்பே தங்களுக்கான தொகுதி, தங்களுக்கான தேர்தல் வாய்ப்பு, தங்களுக்கான அரசியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துகொண்டே வருகிறார்கள்.

திமுக உட்கட்சி அதிருப்தி

அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனுக்கு அவரது ஆலங்குளம் தொகுதியையே தர திமுக சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கட்சியில் இணைந்த வைத்தியலிங்கத்துக்கும் ஒரத்தநாடு தொகுதியை ஒதுக்கப்போகிறார்கள் என்று பேசப்படுகிறது. அமமுகவில் இருந்து வந்த ஜமீன்தார் மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதியை நேரடியாக தலைமையிடம் கேட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன" என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படை தொண்டர்கள்

இந்த சூழ்நிலையில், "மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களையே ஜெயிக்க வைத்து அமைச்சர்களாக்கினால், காலங்காலமாக கட்சிக்காக அடிபட்டு, மிதிபட்டு, உழைத்து வந்தவர்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?" என்ற கேள்வி பரம்பரை திமுகவினரிடையே அதிகமாக எழுந்து வருகிறது. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், கட்சியில் சேர விரும்பும் அரசியல் தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அந்த வருகைகள் தலைமையால் வரவேற்கப்படுவதும் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அடிப்படை தொண்டர்களின் மனநிலை முற்றிலும் வேறு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பரம்பரை திமுகவினர்

கட்சிக்காக போஸ்டர் ஒட்டிய காலத்திலிருந்து இன்று வரை பயணம் செய்தவர்கள், ஊராட்சி, நகராட்சி, ஒன்றிய அரசியலில் அடிபட்டு வளர்ந்தவர்கள், தேர்தல் நேரங்களில் மட்டுமே நினைவுக்கு வருபவர்களாக மாறிவிடும் நிலைதான் தங்களுக்கு கிடைக்கும் பலன் என்ற மனநிலை உருவாகியுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் பெரிய முகங்களுக்கு மட்டும் சீட், பதவி, முக்கியத்துவம் கிடைத்தால், பரம்பரை திமுகவினர் என்ற அடையாளம் வெறும் வரலாற்றுச் சொல்லாக மட்டுமே மாறிவிடுமோ என்ற அச்சமும் அவர்களிடையே உருவாகி வருகிறது என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+