தூத்துக்குடி தலித் மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்- தாமாக விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம்!
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிக்க ஜாதி சிறுவர்களால் தலித் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் ஒருவர், ஆதிக்க ஜாதி மாணவர்களால் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தமது தேர்வுக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளால் அவர் பேருந்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு அரிவாளால் தாக்கப்பட்டதில் அவரது இடது கையில் இருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டன. இதில் தலையிட முயன்ற சிறுவனின் தந்தையும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்செய்தி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். எனவே, இது குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
12.03.2025 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர், சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவக் குழுவினர் சிறுவனின் விரல்களை மீண்டும் இணைத்தனர். இவ்வாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நெல்லை படுகொலை குறித்தும் விசாரணை
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியில் உள்ள வக்ஃப் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சட்ட வழக்குகள் மூலம் எதிர்த்துப் போராடும் ஒரு ஆர்வலர் என்றும், சிலரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் காவல் துறையினர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இச்செய்தி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். எனவே, இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 2025 மார்ச் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, காவல்துறையினரின் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியப் போக்கு அவரது கொலைக்கு வழிவகுத்ததாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications