நீலகிரி,குமரியில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..ரெயின் கோட் அவசியம்
சென்னை : நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னடியன் அணைக்கட்டு, திருநெல்வேலியில் தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மாதேவியில் தலா 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்று அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. 19ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வரும். அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளது. அதனால், தமிழகத்தில் 20ம் தேதி முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னடியன் அணைக்கட்டு (நெல்லை), திருநெல்வேலியில் தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சேரன்மாதேவியில் தலா 4 செ.மீ., செங்கோட்டை, பாளையங்கோட்டை, பெருஞ்சாணியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆழ்கடல் மீன்படி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு செல்லவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications