Vijay Astrologer: 2026ல் விஜய் போட்டியிடும் தொகுதி எது? ஜோசியர் கணித்த அந்த 9 தொகுதிகள் இவைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் போட்டியிடும் தொகுதி மதுரை அல்லது டெல்டா மாவட்டங்களாக இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அவர் போட்டியிடலாம் என கணிக்கப்பட்டு 9 தொகுதிகளின் பட்டியல்கள் விஜய்யிடம் டேபிளுக்கு சென்றுள்ளனவாம். அந்த 9 தொகுதியில் வெற்றி நிலவரம், மக்களின் மனநிலை, ஆதரவு உள்ளிட்ட காரணிகளை பொருத்து அவர் ஒரு தொகுதியிலோ இரு தொகுதியிலோ போட்டியிடலாம் என சொல்லப்பட்டுள்ளது.

விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை அவரது குடும்ப ஜோதிடர் கணித்து கூறியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

vijay tamil nadu assembly election 2026 2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியாக அமையும் என சொல்லப்படுகிறது. இதில் அமமுக தனித்து போட்டியிடுமா என்று தெரியவில்லை. பாமகவும் தேமுதிகவும் எந்த பக்கம் சாயும் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.

இதுவரை தேர்தலையே சந்திக்காத தவெக, இந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலைத்தான் குறி வைத்துள்ளது. இப்போதே முதல்வர் விஜய்தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கள நிலவரமோ தற்போது கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் மற்ற தொகுதிகளில் விஜய்க்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!

இந்த நிலையில் விஜய் மதுரை அல்லது டெல்டா தொகுதிகளில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. ஏனென்றால் பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியது மதுரை, திருச்சி என்பதால் அந்த தொகுதிகளிலோ அல்லது டெல்டா தொகுதிகளிலோ போட்டியிடலாம் என சொல்லப்பட்டு வந்தது.

இதற்காகவே மதுரையில் விஜய் மாநில மாநாட்டை தேர்வு செய்தார் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரை வைத்தே அரசியல் முடிவுகளை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

அவரது வழிகாட்டுதல் படி 'வி (V)' என்ற எழுத்தில் தொடங்கும் தொகுதிகளில் விஜய் போட்டியிட வேண்டும் என குடும்ப ஜோதிடர் கணித்துள்ளாராம். அந்த வகையில் வி என்ற எழுத்தில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விளவங்கோடு ஆகிய 9 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாம்.

இந்த தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த 9 தொகுதிகளின் பட்டியலும் விஜய் டேபிளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அது போல் ரகசிய சர்வே முடிவுகளும் அவருக்கு அனுப்பப்பட்டதும் அவர் எந்த தொகுதி என்பதை டிக் அடிப்பார் என சொல்லப்படுகிறது. அஜித்தான் வி என்ற எழுத்திலான படங்களில் நடித்து வருகிறார். அது போல் விஜய்யும் வி சென்டிமென்ட்டை வைத்துக் கொண்டு வி எழுத்தில் தொடங்கும் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+