சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 "C"க்களை கண்டு அஞ்சாதீர்.. வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில் அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Nirmala Sitharaman says that Bank officials need not fear on bank related scams

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் சிபிஐ இயக்குநர் ரிஷிகுமார் சுக்லாவும் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2019 ஆம் ஆண்டில் 1.69 லட்சம் ரூபாய்க்கு குறைந்துள்ளது.

கடன் வசூலும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ரூபே, பீம் யூபிஐ, ஆதார் பே, டெபிட் கார்டு, நிப்ட், ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட டிஜிட்டல் பணபரிமாற்ற முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது போன்று வர்த்தக நிறுவனங்களுக்கான தள்ளுபடி சலுகை ஜனவரி முதல் தேதியில் இரு்நது அமல்படுத்தப்படும்.

உள்ளாட்சி தேர்தல்- 30 தொகுதிகளில் டிச.31-ல் மறுவாக்குப் பதிவுஉள்ளாட்சி தேர்தல்- 30 தொகுதிகளில் டிச.31-ல் மறுவாக்குப் பதிவு

வங்கி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சிபிஐ அமைப்பு தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிவு செய்யாது. 3சி என அழைக்கப்படும் சிபிஐ, சிஏஜி, சிவிசி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற அச்சத்தை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றார்.

English summary
FM Nirmala Sitharaman says that Bank officials should not fear unnecessarily about bank related scams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X