Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானே ஒரு புறம்போக்கு.. பரதேசி.. என்னை போய்.. பஞ்சாயத்து முடிஞ்சாச்சு கிளம்பு.. நித்தியானந்தா செம

சாமியார் நித்தியானந்தா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    PM Nithyananda | நித்யானந்தா செய்யும் அலப்பறைகள் ..!

    சென்னை: "நான் ஜாலியா இருந்தால், ஏன் வயிறு எரியறீங்க.. முடிந்தால் நீங்களும் ஜாலியா இருங்க.. நான் ஒரு புறம்போக்கு, என்னை யாராலும் எதுவுமே செய்ய முடியாது.." என்று நித்யானந்தா ஆவேசத்துடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை, பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீசார் நித்யானந்தாவை தேடி வருகிறார்கள். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை..

    ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியிருக்கிறார் என்றும், அதற்கு கைலாசம் என்ற பெயரையும் சூட்டி தனி நாடு போல மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இன்னொரு புறம் இமயமலையில் இருக்கிறேன் என்று நித்யானந்தாவே வீடியோ ஒன்றினை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

    ஈழத் தமிழர் குறித்து ஹிலாரி கிளிண்டன் சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் ஜெ.: சீமான்

    கைலாசம்

    கைலாசம்

    ஆனால், நித்யானந்தா கைலாசத்தில் தனது பக்தர்களுடன்தான் தங்கியிருப்பதாகவும், அங்கிருந்துதான் யுடியூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் எங்கிருக்கிறார் என்ற விவரமே தெரியாமல் குழம்பி போயுள்ள நிலையில், இப்போது திடீரென இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சுமார் ஒன்றரை மணி நேரம் பக்கம் பக்கமாக பேசுகிறார் நித்தியானந்தா.

    ஜாலியா இருங்க

    ஜாலியா இருங்க

    "நான் ஜாலியா இருக்கிறதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், உங்களால் முடிந்தால் நீங்களும் ஜாலியா இருங்க.. நான் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என் ஆசிரமங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.. மான அவமானத்தை பத்தியெல்லாம் கவலைப்படவில்லை.. நான் ஒரு புறம்போக்கு, என்னை யாராலும் எதுவுமே செய்ய முடியாது.. என் மீதும், சங்கத்தின் மீதும் நடத்தும் தாக்குதல் திட்டமிட்ட குற்றம்.

    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.. பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன.... சர்வதேச சமூகம் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.. இந்த சர்வத்தில் தன்னை பயமுறுத்த எவராலும் முடியாது என்னையும், என் பீடத்தையும் கடவுளே களம் இறங்கி நேரடியாக காத்துவருகிறார்" ஆவேச வீர வசனங்களை பேசி உள்ளார். நடுநடுவே தன் பேச்சில் சிவன் பெயரை இழுத்து கொண்டு வந்து முன்னிறுத்து பேசுகிறார்.

    ஆர்வம்

    ஆர்வம்

    இப்போது நித்யானந்தாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று முனைப்பும், தீவிரமும் நம் போலீசாருக்கு கூடியுள்ளது என்றாலும், அதற்குள் கைலாசத்தை எப்படியாவது தனி நாடு மாற்றிவிட வேண்டும் என்பதில் நித்யானந்தாவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+