சென்சாரே கிடைக்கல! அதுக்குள்ள ஜனநாயகன் டிக்கெட் புக்கிங்கா? ரசிகர்கள் அதகளம்! ப்ளூசட்டை அட்டாக்!
சென்னை: "ஜனநாயகன்" படத்திற்கு இன்னும் சென்சாரே கிடைக்கவில்லை, அதற்குள் சென்னை ரோகிணி தியேட்டர், நெல்லை ராம் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது குறித்து ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் சென்சார் வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். '10 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாமே' என்றும் கேட்டுள்ளது.

சிறப்புக் காட்சிக்கான அனுமதி தமிழக அரசால் இன்னும் தரப்படவில்லை. அதற்குள் ஜனநாயகன் படத்தின் ஜனவரி 9 ஆம் தேதி காலை 9 மணிக்காட்சி டிக்கெட்களை சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் விற்றுள்ளதாக இன்றைய Times of India நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுபோக மதுரையில் 8 தியேட்டர்களிலும் இப்படி நடந்துள்ளதாக இந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பாக கேட்ட கேள்விக்கு கோயம்பேடு ரோகிணி தியேட்டர் ஓனரும், திருப்பூர் சுப்ரமணியமும் வித்தியாசமாக வடையை சுட்டு இருக்கிறார்கள்.
அந்த வடைகளும் இதே செய்தியில் உள்ளன. படித்து பாருங்கள்.
சென்சார், நீதிமன்றம், தமிழக அரசு என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதபோது.. இத்தனை அவசரமாக டிக்கெட்களை விற்றுத்தள்ளும் வேகம் எதற்கு?
படங்கள் ஓடாததற்கு காரணம் OTT, விமர்சகர்கள், ஹீரோக்களின் சம்பளம் என ரக ரகமாக காரணம் சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர்... இதற்கு நேர்மையான காரணத்தை சொல்லவே மாட்டார்கள்.
வடை மட்டும்தான் சுடுவார்கள்.
அஜித், விஜய் போன்ற வசூல் கொட்டும் ஹீரோக்கள் போனபிறகு.. வேறுசில ஹீரோக்களை பில்டப் செய்து..அவர்தான் அடுத்த ரஜினி, விஜய் என ஏத்தி விடுவார்கள்.
அப்படித்தான் அமரனுக்கு பிறகு திடீர் தளபதியை ஏத்தி விட்டார்கள். சாய் பல்லவியின் நடிப்பால்தான் அந்த படம் ஓடியது என்பது தெரியாமல்.... அந்த அப்பாவியும் தன்னை அடுத்த சிவாஜி, ரஜினி, விஜய்யின் கலவை என எண்ணி...கெத்தாக திரிந்து கொண்டிருக்கிறார். பாவம்.
தமிழ் சினிமாவில் சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல், அஜித் - விஜய். அவ்வளவுதான்.
இனி புதிதாய் இரண்டு சோப்ளாங்கிகளை எதிரெதிரே முன்னிறுத்தும் பருப்பு வேகாது. இந்த பீசுகளை வைத்து ப்ளாக் டிக்கெட் எல்லாம் விற்க முடியாது. ஜனநாயகனோடு ப்ளாக் டிக்கெட் ஆட்டமும் பெருமளவு முடிந்து விடும். இவ்வாறு ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications