சென்னைக்கு வரும் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம் - நீர்வளத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அடையாறு, கொசஸ்தலை ஆறுகளில் நீர் திறப்பால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மிக கன மழை பெய்தாலும் வெள்ள நீர் மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்பாக கடலைச் சென்றடையும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

chennai rain weather

பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக, சென்னையின் முக்கிய நீராதாரங்களை தயார்படுத்தும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக பூண்டி, செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ் (புழல்) ஆகிய 3 முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் தென் சென்னையில் உள்ள கீழ்க்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை உபரி நீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் 2,387 கனஅடி வீதமும், புழல் ஏரியில் 500 கனஅடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கனஅடி வீதமும் உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதலே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீரை 2,287 கன அடி வீதம் வெளியேற்றி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,521 மில்லியன் கனஅடியாக இருந்தது.

புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், 13.5 கி.மீ நீளமுள்ள உபரி கால்வாய் வழியாக மணலியில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றில் கலக்கிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,732 மில்லியன் கன அடி இருந்தது.

தென் சென்னையில் உள்ள நாராயணபுரம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளில் இருந்து மொத்தம் 3,420 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ரேடியல் சாலை (Radial Road), ஓ.எம்.ஆர் (OMR) பகுதிகளில் வெள்ளத்தைக் குறைக்கும் நோக்குடன் நீர்வளத் துறை இந்த ஏரிகளில் இருந்து நீரைத் திறந்துள்ளது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ரேடியல் சாலை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. அங்கிருந்து ஓக்கியம் மடுவு, பக்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்று இறுதியில் கோவளம் கழிமுகத்தில் கலக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+