Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஸ்டிக் பை வேண்டாம்... மஞ்சப் பை போதும்.. சுற்றுச்சூழலை காக்க ஸ்டாலின் தொடங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைக்கு போகும் போது மஞ்சள் பை எடுத்துப்போன காலம் மாறி விட்டது கேரி பேக் காலமாகி விட்டது. இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலை காக்க மஞ்சப்பைதான் தேவைப்படுகிறது. நமது சுற்றுச்சூழலைக் காக்க பிளாஸ்டிக் பையை விடுத்து மீண்டும் மஞ்சப்பையை மக்கள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்த உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் முதன்மையாக இருப்பதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் மாசடைந்து, உயிரினங்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இந்தியாவில் 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. அதே ஆண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிளாஸ்டிக் குப்பைகள்

பிளாஸ்டிக் குப்பைகள்

இதேநிலை நீடித்தால் ஆறு, குளங்களில் நீருக்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும் சூழல் உருவாகும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக ஆபத்துகள் ஏற்படுவதால், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்துள்ளது.

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை

கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை பிறப்பித்துள்ளது. மீறுவோருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.

தமிழக அரசு புது இயக்கம்

தமிழக அரசு புது இயக்கம்

கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தனி நபர், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படாததால் மெல்ல மெல்ல ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புது இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளது.

மஞ்சப்பை அவசியம்

மஞ்சப்பை அவசியம்


'மீண்டும் மஞ்சப்பை' என்ற புதிய இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சி அளவில் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள தமிழக அரசு (Tamil Nadu), மஞ்சப்பை மற்றும் பொட்டலம் கட்டும் முறையை நடைமுறைக்கு வருவது காலநிலை மாற்றத்துக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு விழிப்புணர்வு

தமிழக அரசு விழிப்புணர்வு

ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது குறித்து அடையாளம் காணப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பங்கெடுக்க உள்ளனர்.

மாற்றுப்பொருள்

மாற்றுப்பொருள்

தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்க கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே "மீண்டும் மஞ்சப்பை" பரப்புரையின் நோக்கம்.

விளக்கப்படக் கண்காட்சி

விளக்கப்படக் கண்காட்சி

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உட்பட) மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை-5, வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம்

ஆகையால், பொதுமக்களாகிய தாங்கள் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23-ந்தேதி அன்று மாலை 7 மணி வரை கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி கடைக்கு போனால் மஞ்சப்பை அவசியம் கொண்டு செல்லுங்கள் மக்களே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+