ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானமும் வரக்கூடாது - ஓபிஎஸ் தரப்பு வாதம்.. ஒரே பாயிண்ட்!
சென்னை : ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் முன் வைக்க இயலாது என்றும் ஒருங்கிணைப்பாளர்களை நீக்க கட்சி விதியில் இடமில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் வாதத்தை எடுத்து வைத்துள்ளது.
சென்னை வானகரத்தில் நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின்போது ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 23 தீர்மானங்களை தாண்டி எந்த தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என வாதம் செய்து வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ, நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடத்தி ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிகளை பொதுக்குழுவால் நீக்க முடியாது என்றார்.

23 தீர்மானங்கள்
மேலும், 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் ஒப்புதல் கொடுத்துள்ளார். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர புதிதாக எதையும் சேர்க்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

எடப்பாடி வழக்கறிஞர் பதில்
இதில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, இது நடக்கும் இது நடக்காது என்று சொல்லமுடியாது. பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், முடிவெடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. கொள்கையை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. செயல்திட்டங்கள் இல்லாமல், அஜெண்டா இல்லாமல் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடந்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் எந்த விவகாரம் தொடர்பாகவும் குரல் எழுப்பலாம் எனப் பதில் அளித்தது.
Recommended Video

ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல்
அதற்கு ஓ.பி.எஸ் தரப்பு, "ஒரு விவகாரத்தை முன் மொழிவது என்பது வேறு, விவகாரத்தை எழுப்புவது என்பது வேறு. பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானதுதான். ஆனால், ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் முன் வைக்க இயலாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சி விதியில் இடமில்லை. ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது" என்ற வாதத்தை முன்வைத்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications