உதயநிதிக்கு பாதிப்பு என்பதால் கனிமொழிக்கு சீட் இல்லையா? துரைமுருகன் பதில்
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான் - அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உதயநிதிக்கு பாதிப்பு என்பதால் கனிமொழிக்கு சீட் வழங்கப்படவில்லை என்று சீமான் கூறுகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு துரைமுருகன் அளித்த பதிலை பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கேவி குப்பம் மற்றும் காட்பாடி தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளரும் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

அந்த அலுவலகத்தை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்தார்.இதில் திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கிறோம், பிரிட்ஜ் கொடுக்கிறோம், மாசம் 2000 ரூபாய் கொடுக்கிறோம், வருஷத்துக்கு மூணு சிலிண்டர் தரோம்னு அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்காங்களே என்ற கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன், இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை, அதில் இது ஒன்று என கூறினார்.
அதேபோல சீமான் நேற்று சொல்லியிருக்காரு, கனிமொழி அவர்களுக்கு மாநில அளவில் சீட் கொடுக்க மாட்டாங்க, ஏனெனில் அவங்க ஒரு திறமையான பெண், அவங்களுக்கு கொடுத்தால், உதயநிதிக்கு பாதிப்பு ஏற்படும்னு.. சீமான் தேர்தல் பிரச்சாரத்துல சொல்லியிருக்காரு.. என்ற கேள்விக்கு...
அதைப்பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இப்போ அதிமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர் நலன் கருதி சில சலுகைகள் கொடுத்திருக்காங்க. அதுபோல நம்ம தேர்தல் அறிக்கையில பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது வருவதற்கு வாய்ப்பு இருக்கா ? மருத்துவக் காப்பீடு மற்றும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் அதிமுக அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு.. தேர்தல் அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அந்தக் குழுவில் நான் இல்லை இப்போ அதைப்பற்றி சொல்ல முடியாது என்றார்.
அதிமுக நிறைய விஷயங்களை தேர்தல் அறிக்கைகளை சொல்லி இருக்காங்க. ஆனா அதற்குரிய நிதி கிடைக்குமா? ஏற்கனவே திமுக நிறைய கடன் வாங்கி 9 லட்சம் கோடியைத் தாண்டிடுச்சுன்னு சொல்றாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பல லட்சம் கோடி செலவாகும், இதைப்பற்றி உங்க கருத்து என்ன? என்ற கேள்விக்கு அவங்க ஆட்சிக்கு வரப்போறது இல்லை. சும்மா ஏதோ ஒன்னு சொல்லிட்டுப் போறாங்க. அது வெறும் வெத்து வேட்டு தான் என்று துரைமுருகன் கூறினார்.
உங்க கூட்டணியில இருக்கிற ஒரே தலித் தலைவர் திருமாவளவன் மட்டும்தான். அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏன் இவ்வளவு இழுபறி மற்றும் காலதாமதம்? அவரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருக்காரே என்ற கேள்விக்கு... அவருக்கு ஒன்னும் வருத்தம் இல்லை, எங்க பக்கத்துல மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications