தோசை, இட்லி மாவுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்குங்க.. ஸ்டிரைட்டா நிர்மலா சீதாராமனிடமே போன வணிகர் சங்கம்
சென்னை: ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட போதிலும்கூட, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமலேயே உள்ளது.. எனவே, இட்லி, தோவை மாவு பாக்கெட்டுகளுக்கு வரி விலக்கு தேவை என்று உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இதே கோரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, தங்கள் கோரிக்கை மனுவையும் வழங்கியிருக்கிறது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை கடந்த ஏழு ஆண்டுகளாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. 5%, 12%, 18%, 28 % என்ற அடிப்படையில் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறை கைவிடப்பட்டது. அத்துடன் பல பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டன.
மாவு பாக்கெட்டுக்கு வரி
முக்கியமாக சில உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. சாதாரண ரொட்டி, சப்பாத்தி, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், யுஎச்டி பால், பீட்சா, பிரட் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டது.
எனினும் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் போன்றவைகளின் ஜிஎஸ்டி வரி மட்டும் நீக்கப்படவில்லை. மேலும், இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் போன்றவற்றின் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதிலும் பாக்கெட் மாவு விற்பனைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதம் என அறிவிக்கப்பட்டது தென்னிந்திய மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை தந்துவிட்டது.
இட்லி மாவு, தோசை மாவு
எனவேதான், இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உணவுப்பொருள் வியாபாரிகள் விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.. கடந்த வாரம்கூட, இதுதொடர்பாக வணிக வரித்துறை கமிஷனரிடம் வணிகர்கள் மனு அளித்திருந்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் சொல்லும்போது, "சரக்கு மற்றும் சேவை வரியான, ஜிஎஸ்டி மறுசீரமைப்பால், 90 சதவீதப் பொருட்களுக்கு, வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத பொருட்களுக்கு, வரி குறைப்பும், சலுகையும் வழங்கப்படவில்லை. இட்லி மாவுக்கு, 5 சதவீதம் ஜிஎஸ்டி அப்படியே உள்ளது. இட்லி மாவு ஒரு நாளில் கெட்டுப்போய் விடும்.
பாக்கெட் மாவு கெட்டுப்போகுது
எனவே இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், காகிதத்திற்கு, 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இட்லி, தோசை மாவுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிதியமைச்சரிடம் கோரிக்கை மனு தரப்பட்டுள்ளது.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
சிலிண்டருக்கான ஜிஎஸ்டி
அந்த மனுவில், "ஜிஎஸ்டியை இரண்டு அடுக்குகளாக மாற்றியதை வரவேற்கிறோம். கடந்த, 2017 - 24 வரையிலான ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வணிகர்களை தண்டிப்பதை கைவிட வேண்டும்.
ஜிஎஸ்டி வரம்பை 40 லட்சம் ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபாய் விற்பனை வரம்புக்கு மாற்ற வேண்டும், இணக்க வரியை 1.50 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். டீ கடை, ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்" என்று தங்கள் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications