9 பேருக்கு குறி.. சிக்கிய ஒருவர்.. "வதந்தி" பரப்பிய மாஸ்டர்மைண்ட்.. சாட்டையை சுழற்றிய சைலேந்திர பாபு
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும்.
இந்த வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது போலீசார் அதிரடி ஆக்சன்களை எடுத்து வருகின்றனர் , பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.

பாஜக
பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது. பீகார் பாஜகதான் இந்த புகாரை வைத்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் பிடிக்க டெல்லி விரைந்துள்ளனர். இதில் பிரசாந்த் உமாராவை கைது செய்ய மார்ச் 20 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஜாமீன் பெற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலி வீடியோ
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது போக இன்று செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கியிருந்த மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் இதில் நிறைய வதந்திகள் பரப்பியதால் கைது செய்யப்பட்டார்.

வழக்கு
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் இன்று காலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் அவர் ஆதாரம் இன்றி வதந்தி பரப்பியது உறுதியானது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது, செய்தனர் இது போக ஓபிஇந்தியா செய்தி நிறுவனத்தின் ராகுல் ரோஷன், நுபுர் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநின்றவூர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ராகுல் ரோஷன் அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆவார். அதேபோல் நுபுர் சர்மா அதன் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி நிறுவனம் தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யாக செய்தி வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பொய்யான செய்திகளையும், வீடியோக்களையும் இவர்கள் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் வழக்கு
திருநின்றவூர் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ராகுல் ரோஷன் அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆவார். அதேபோல் நுபுர் சர்மா அதன் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி நிறுவனம் தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யாக செய்தி வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. பொய்யான செய்திகளையும், வீடியோக்களையும் இவர்கள் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
