சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை - 26ல் வடகிழக்குப் பருவமழை துவங்கும்

குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்கிழமையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

Recommended Video

    TN Weather Report Oct 22 2021: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை | OneIndia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

    கடந்த 24 மணி நேரத்தில் அமராவதி அணைப்பகுதியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. செஞ்சி, அரவக்குறிச்சி, திருமூர்த்தி அணைப்பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல், கன்னியாகுமரி,மடத்துகுளம் பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவானது. கோபிச்செட்டிபாளையம், விருதுநகர், கோவில்பட்டி, சேலம், உத்தமபாளையம், திருவிடைமருதூர் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழைக்கு வாய்ப்பு

    கனமழைக்கு வாய்ப்பு


    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,
    குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மதுரை,விருதுநகர், சிவகங்கை, சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

    2 நாட்களுக்கு கனமழை

    2 நாட்களுக்கு கனமழை

    நாளைய தினம் வேலூர்,ராணிப்பேட்டை ,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு ,சேலம், தருமபுரி ,திருச்சி, கரூர்,நாமக்கல், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் அரியலூர், பெரம்பலூர்,திருச்சி ,கள்ளக்குறிச்சி,கரூர், நாமக்கல், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    திங்கள், செவ்வாயில் மிககனமழை

    திங்கள், செவ்வாயில் மிககனமழை

    25 மற்றும் 26ஆம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திண்டுக்கல்,கரூர்,திருச்சி,திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    வடகிழக்குப் பருவமழை

    வடகிழக்குப் பருவமழை

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

    இயல்பான மழை அளவு

    இயல்பான மழை அளவு

    தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26ஆம் தேதி தேதியை ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு கிடைத்தது. நடப்பாண்டு இயல்பான அளவு மழை பதிவாகும் என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

    English summary
    Madurai, Sivagangai, Virudhunagar, Pudukottai and Ramanathapuram districts are likely to receive heavy to very heavy thundershowers on Monday and Tuesday, the Met office said. Director of the Meteorological Center Puviarasan said that the conditions are favorable for the onset of the northeast monsoon in Tamil Nadu from October 26.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X