"அதிமுக ஆட்சியில் ஒரு பேருந்து கூட வாங்கவில்லை" அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பேருந்து கூட வாங்கவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இலாகா மாற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை சிவானந்த சாலையில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் சிஐடியு தலைவர் சவுந்தராசன் தலைமையில் பொது போக்குவரத்து மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

சிஐடியு கருத்தரங்கு
அதில் என்ஜின் ஆப் தமிழ்நாடு என்ற ஆவண படமும் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு என்ஜின் ஆப் தமிழ்நாடு என்ற ஆவண படத்தை வெளியிட்டார். பின்பு ஆவணப் படத்தை இயக்கிய குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மின்சார பேருந்துகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறுகையில், சிஐடியு சார்பாக இந்த பொது போக்குவரத்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆவணப்படம் வெளிட்டப்பட்டது. சென்னையில் 100 மின்சார பேருந்துகளை வங்க உள்ளோம். அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

பேருந்து வாங்கவில்லை
அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு வாங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பேருந்துகளும் வாங்கப்படவில்லை. 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் வாங்கப்பட்ட அளவுக்கு பேருந்து கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்படவில்லை.

ஓலா, ஊபர் பற்றி கருத்து
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு பேருந்துகள் பராமரிக்காமல் இருந்தது. இப்பொழுது தான் அது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஓலா, ஊபர் போன்ற தனியார் செயலி மூலம் இயக்கப்படும் போக்குவரத்து குறித்து ஏற்கனவே தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளனர். அது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் தீர்வு காணப்படும்" எனக் கூறினார்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications