சென்னை, கோவை கிட்டயே நெருங்க முடியாது.. தமிழ்நாட்டிலேயே பணக்கார மாவட்டம் செங்கல்பட்டு
சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், உலகத்தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 758 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்த வேலைவாய்ப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.
ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், உலகத்தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்படுவது வழக்கம். ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் வளர்ச்சியை அதிகரிக்க அந்த பகுதியில் அரசே நிலம் கொடுத்து, கட்டிங்கள் கொடுத்து, வரி சலுகை கொடுத்து நிறுவனங்களை கொண்டு வருகின்றன. அப்படி உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் வேலைவாய்ப்பு பெருகும்.

அந்தவகையில் இந்தியாவில் அதிக பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொண் மாநிலம் என்றால், அது தமிழ்நாடு தான் . இந்தியாவில் மொத்தம் 276 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 54 மண்டலங்கள் உள்ளன. அதற்கடுத்தபடியாக மகாராஷ்டிரா தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து கடந்த 2024-25-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டன? அதன்மூலம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன? என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 2024-25-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 501 கோடி மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் அதன்மூலம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 403 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 758 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் செங்கல்பட்டில் மட்டும் 70 சதவீதமும், வேலைவாய்ப்புகளில் 51.16 சதவீதமும் பதிவாகி உள்ளது. செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக சென்னை மாவட்டத்தில் ரூ.34 ஆயிரத்து 837 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 687 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 710 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 38 ஆயிரதது 427 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கோவைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 5463 கோடி மதிப்பில் ஏற்றுமடித செய்யப்பட்டுள்ளது. 150004 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2903 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 15362 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, திருநெல்வேலி, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்றுமதி அதிக அளவில் உள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 2000 முதல் 1200கோடி வரை ஏற்றுமதி நடந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications