வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பில்லை.. திருவள்ளூர் கல்லூரிகளுக்கு விடுப்புகேட்ட மாணவருக்கு கலெக்டர் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழையையொட்டி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை கோரிய இளைஞருக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மாஸாக ரிப்ளை செய்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவழை கடந்த மாதம் இறுதியில் துவங்கியது. கடந்த மாதம் 29 ம் தேதி தமிழகத்தில் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து இடங்களிலும் பெய்து வருகிறது. பல இடங்களில் காலை முதல் மாலை வரை மழை பெய்கிறது.

வெளுத்து வாங்கும் மழை

வெளுத்து வாங்கும் மழை

இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம், தொழிற்சாலை செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் மாலை நேரங்களிலும் அவர்கள் வீடு திரும்பும்போது மழையில் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன்கருதி முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 8 ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

குறிப்பாக நேற்று இரவு சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்படி இன்று சென்னை, மயிலாடுத்துறை, திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

அதேபோல் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

கலெக்டரிடம் விடுப்பு கோரிய..

கலெக்டரிடம் விடுப்பு கோரிய..

இந்நிலையில் தான் விக்ரம் ரவி என்பவர், ‛‛திருவள்ளூர் கலெக்டர் சார், திருவள்ளூரில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா?'' என கேட்டார். இதற்கு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இருந்து ரிப்ளை வழங்கப்பட்டது. அதில், ‛‛இன்று இல்லை. அடுத்த முறைக்காக காத்திருங்கள்'' என பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+