சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாட்டில் வசிக்கிறவங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? மின்வாரியத்தின் புது அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இணைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், என்.ஆர்.ஐக்கள் எனப்படும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தங்கள் வீடுகளில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி என்ற விவரத்தை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் உள்ளன.

அதுபோக 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. மின் இணைப்பு எண்ணுடன் நுகர்வோரின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்! மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!

சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம்கள்

இதன்படி, தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்களையும் தமிழக மின்சார வாரியம் அமைத்துள்ளது. வரும் 31 ஆம் தேதி முதல் இந்த முகாம்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டும் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருந்தது.

 இணையதளம் வாயிலாக

இணையதளம் வாயிலாக

ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்பட மானியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது மின்சார வாரியத்தின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்கள் மட்டும் இன்றி இணையதளம் வாயிலாகவும் ஆதார் எண் இணைக்கும் வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

 4-வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ...

4-வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ...

இதனிடையே, வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்ற சந்தேகங்களில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலருக்கும் எழுந்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இங்குள்ள அவர்களது வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு வசதிகளை மின்சார வாரியம் செய்துள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை இணைக்கும் வெப்சைட் லிங்கில் 4-வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. ரிலேட்டிவ்ஸ் என்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண் கட்டாயம்

ஆதார் எண் கட்டாயம்

இந்த வசதியை பயன்படுத்தி வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள முடியும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்து இருக்கிறது. மின்சார வாரியம் ஆதார் எண் இணைப்பதை கட்டாயம் ஆக்கியுள்ள நிலையில், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் , மானியங்களை பொதுமக்கள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கும் நிலையில், மாநில அரசும் தற்போதும் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

English summary
How to link aadhaar number for people living abroad, how to link aadhaar number with electricity connection number for people living abroad, electricity board has released a new link for people living abroad to link aadhaar with connection number,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X