குமரி இளைஞர் ஆணவப்படுகொலையில் காவல்துறைக்கும் தொடர்பு?.. பகீர் சந்தேகம் எழுப்பும் சீமான்!
சென்னை: குமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூரைச் சார்ந்த தம்பி சுரேஷ் குமார் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். சாதிய வன்மத்தோடு இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை இதுவரை காவல்துறையினர் கைது செய்யாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

ஆணவப்படுகொலை
சாதிவெறியோடு படுகொலை செய்திட்டக் குற்றவாளிகளுக்கு ஆதரவான காவல்துறையின் முறைகேடான இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. படுகொலைசெய்யப்பட்ட தம்பி சுரேஷ்குமார் ஆதித்தமிழரென்பதால் அவரது காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்ததென்பதும், தான் காதலித்த பெண்ணின் உறவினர்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டாரென்பதும் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

காவல்துறைக்கும் தொடர்பு?
மேலும், பூதப்பாண்டி காவல் உதவி ஆய்வாளரின் அழைப்பின்பேரில், பேச்சுவார்த்தைக்குச் சென்ற சுரேஷ்குமார் வீடுதிரும்பாமல் படுகாயங்களோடு இறந்துகிடந்தது அவரது படுகொலையில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, படுகொலை செய்யப்பட்ட தம்பி சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தும், இதுவரை இப்படுபாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குற்றவாளிகளுக்குக் காவல்துறை துணைபோவதை வெளிக்காட்டுகிறது.

பெருங்கோபத்தை உண்டாக்குகிறது
சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக எத்தனை பரப்புரை செய்தாலும், எத்தனை அறிவியல் வளர்ச்சியும், நாகரீக முதிர்ச்சியும் இச்சமூகம் அடைந்தாலும், குடும்பக்கௌரவம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் சாதிய வன்மத்திலும், ஆதிக்க மனநிலையிலும் நிகழ்ந்தேறும் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் மிகுந்த மன வேதனையையும், பெருங்கோபத்தையும் உண்டாக்குகின்றது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்
ஆகவே, சக மனிதர்களை விலங்குகளைவிடக் கீழானவர்களாகக் கருதி, சிறிதும் ஈவு இரக்கமின்றி இக்கொடியச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்றும், இக்குற்றச்செயலில் காவல்துறையைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஐயமிருப்பதால் விசாரணை நேர்மையாக நடைபெற இவ்வழக்கினை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications