கத்தரிக்காய் முற்றியது.. பகிரங்கமாகிவிட்ட ஓபிஎஸ்-எடப்பாடி மோதல்.. கடிதமே சாட்சி.. தொண்டர்கள் ஷாக்

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்கக்கோரி எடப்பாடி தரப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடிதம் எழுதியுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதல் பகிரங்கமாகியுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ADMK பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க Edappadi Palanisamy-க்கு OPS கடிதம் *Politics

    அதிமுகவில் வரும் 23ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தீர்மானக்குழு கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதுவே பிரச்சினைக்கு காரணமானது.

    பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 நாட்களாகவே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை சமாதானம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

     தமிழகம் முழுவதும் போஸ்டர் யுத்தம்

    தமிழகம் முழுவதும் போஸ்டர் யுத்தம்

    தமிழகத்தில் ஒற்றைத்தலைமை குறித்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. தலைமை ஏற்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வருங்கால பொதுச்செயலாளர் வாழ்க என்று கோஷமிட்டதுடன் போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.

    ஓபிஎஸ் பேட்டி

    ஓபிஎஸ் பேட்டி

    ஊடகங்கள் தினசரியும் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். ஒற்றைத்தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அதே நேரத்தில் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் இரட்டை தலைமைதான் சரியாக இருக்கும் என்று கூறி பேட்டியளித்தனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக உள்ளனர்.

    ஜெயக்குமார் பேட்டி

    ஜெயக்குமார் பேட்டி

    ஒற்றைத்தலைமை பற்றி திரி கொளுத்திப்போட்ட ஜெயக்குமார், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். இன்றைய தினம் பேசிய அவர், அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். எனது வீட்டுக்கு வந்தால் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம் என்று கூறினார்.

    ஓரம்கட்டும் எண்ணம் இல்லை

    ஓரம்கட்டும் எண்ணம் இல்லை

    அதிமுக ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை; அவரை போல ஓ.பி.எஸ்க்கும் நடக்கும் என கூறுவது தவறு. ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்; யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று பேட்டியளித்தார். இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக சந்திக்கவேயில்லை.

    தவிர்த்த தலைவர்கள்

    தவிர்த்த தலைவர்கள்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரையும் சந்திக்க வைக்க சில ஏற்பாடுகள் நடந்தன. ஏ.சி சண்முகம் கல்லூரியில் கட்டப்பட்டிருந்த வெங்கடாசலபதி கோவிலுக்கு இபிஎஸ், ஒபிஎஸ் ஆகிய இருவரையும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே அந்த கும்பாபிஷேக விழாவிற்கு சென்றார். ஒபிஎஸ் அந்த கோவிலுக்கு செல்வதைத் தவிர்த்து விட்டார். அதே போல அதிமுக தலைமை அலுவலகத்தில் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரைக்கும் இபிஎஸ் வரவேயில்லை. அப்போதே இருவருக்கும் இடையேயான மோதல் வெட்டவெளிச்சமானது. இப்போது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

     எடப்பாடிக்கு ஓ.பிஎஸ் கடிதம்

    எடப்பாடிக்கு ஓ.பிஎஸ் கடிதம்

    இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அந்த கடிதத்தை ஓ.பன்னீர் செல்வத்தில் ஆதரவாளர் வைத்திலிங்கம் வாசித்தார். அந்த கடிதத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

    பொதுக்குழுவை தள்ளிவைக்க கடிதம்

    பொதுக்குழுவை தள்ளிவைக்க கடிதம்

    பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைப்பது குறித்து கடிதம் எழுதியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். தற்போதுள்ள அசாதாரண பொதுக் குழுக் கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விவரம் கிடைக்கப் பெறவில்லை என கழக செயற் குழு மற்றும் பொதுக்க உறுப்பினர்கள், பல மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கது நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். எனவே, மேற்காணும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கழகத்தின் நலன் கருதி, 23ஆம் தேதியன்று அன்று நடைபெறவுள்ள செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்

    கத்தரிக்காய் முற்றியது

    கத்தரிக்காய் முற்றியது

    கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆகவேண்டும். அதுபோல ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையேயான சண்டை தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் நினைத்திருந்தால் போனில் பேசி ஒற்றைத்தலைமை பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்போ, ஒற்றைத்தலைமை என்பதில் பிடிவாதமாக உள்ளது. அதே நேரத்தில் இனியும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்கிறது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு. நீயா..நானா போட்டியும், பகிரங்க கடிதமும் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்விழா காணும் அதிமுகவில் அனல் அடிக்க ஆரம்பித்துள்ளது. ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு இபிஎஸ் தரப்பு ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+