ஆ.ராசா பேச்சை திமுக ஊக்குவிக்கிறதா? சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆ.ராசாவின் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பது திமுக இதை ஊக்குவிக்கிறதோ என்கிற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சமீபத்தில் இந்துக்களில் வர்ண அமைப்பு பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

 ஆ.ராசா சர்ச்சை பேச்சு

ஆ.ராசா சர்ச்சை பேச்சு

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சவன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்று பேசி இருந்தார். ஆ.ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமம்

சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமம்

இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்ற சூழ்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் மதநல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சை பேசி இருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு எம்.பி.யாக பதவி வகித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துவதற்கு சமம்.

திமுக ஊக்குவிக்கிறதா

திமுக ஊக்குவிக்கிறதா


இதைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பது திமுக இதை ஊக்குவிக்கிறதோ என்கிற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆ.ராசாவின் பேச்சுக்கும், அதனைக் கண்டிக்காத தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்

சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்

திமுகவில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று சொல்லும் முதல்வர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கும் ஆ.ராசாவின் கூற்றைக் கண்டிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் முதலமைச்சர் என்பதையும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான இதுபோன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மதத்திற்கு எதிரான பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+