அப்படி போடுங்க.. பாஜக-அதிமுக கூட்டணி உறுதி.. ஓபிஎஸ் சொல்வதை பாருங்க
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் ஏறத்தாழ பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது முடிவாகிவிட்டது என்பதை, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி உறுதிப்படுத்துகிறது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவ்விரு கட்சி தலைவர்களும் இந்த விஷயத்தில் இணக்கமாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் தம்பிதுரை, அன்வர் ராஜா போன்ற அதிமுக எம்பிக்கள் உட்பட சிலர் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில்தான், சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்த ஒரு தகவல் இந்த கூட்டணியை உறுதி செய்வதை போல ஆகிவிட்டது. நேரடியாக அவர் பாஜக என்று கூறாவிட்டாலும் கூட பன்னீர் செல்வம் சுற்றி வளைத்து அதைத்தான் கூறினார்.
ஒத்த கருத்துள்ள தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஆனால் இதை ரகசியமாக செய்து வருவதாகவும் குறிப்பிட அவர் மறக்கவில்லை. கூட்டணி உறுதியானதும் உங்களுக்குத்தான் முதலில் தெரெியும் என்று நிருபர்களை பார்த்து அவர் கூறினார்.

பாஜகதான் பாக்கி
தமிழகத்தில் இரு தேசிய கட்சிகள்தான் ஓரளவுக்கான இருப்பு கொண்டவை. அதில் ஒன்று காங்கிரஸ் மற்றொன்று பாஜக. ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே திமுகவோடு கூட்டணி அமைத்துவிட்டது. எஞ்சியிருப்பது பாஜகதான் என்பதால், அதிமுக, பாஜகவுடன்தான் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தான் பன்னீர் செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சூசகம்
இதுவரை ரகசியமாக இருந்து வந்த இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை பன்னீர்செல்வம் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். தம்பிதுரை போன்ற அதிமுக-பாஜக கூட்டணி பிடிக்காத அதிருப்தியாளர்கள் விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதன் நோக்கமும் இதுதான் என்று தெரிகிறது.

தொகுதி உடன்பாடு
இரு கட்சிகள் நடுவே, கூட்டணி ஏறத்தாழ முடிவாகிவிட்டாலும் கூட இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய வேண்டியதுதான் பாக்கி என்று தகவல்கள் கூறுகின்றன.
-
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications