தூது விட்ட ஓ.பன்னீர்செல்வம்! கதவை அடைத்த கே.பி.முனுசாமி! நிம்மதி பெருமூச்சு விட்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் தூது அனுப்பிய நிலையில் அதனை ஏற்க மறுத்து கதவை அடைத்திருக்கிறார் அவர்.
இதனால் எங்கே மீண்டும் கே.பி.எம். அணி தாவிவிடுவாரோ என்ற பதற்றத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
இருப்பினும் எடப்பாடி பழனிசாமி மீது கே.பி.முனுசாமி சற்று அதிருப்தியில் தான் இருக்கிறார் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் முயற்சிகளை கைவிடுவதாக இல்லையாம்.

அதிமுக உட்கட்சி
அதிமுக மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி கடந்த 2 வாரங்களுக்கு மேல் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சி.வி.சண்முகத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றதும் கே.பி.முனுசாமிக்கு சற்று வருத்தத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக பொதுக்குழுவின் போது மேடையிலேயே கே.பி.முனுசாமி -சி.வி.சண்முகமும் இடையே ஈகோ யுத்தம் வெடித்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு
இதனிடையே அண்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் கே.பி.முனுசாமி தலைகாட்டவில்லை. இதனால் பதற்றம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசி சமாதானம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மீது கே.பி.முனுசாமி மன வருத்தத்தில் இருப்பதை அறிந்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் தூதுவிட்டு பார்த்திருக்கிறது.

கே.பி.முனுசாமி
ஆனால் கே.பி.முனுசாமி அந்த அழைப்பை ஏற்க மறுத்ததோடு கதவையும் அடைத்திருக்கிறார். இதனால் எங்கே மீண்டும் கே.பி.எம். அணி தாவிவிடுவாரோ என்ற பதற்றத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். இருப்பினும் கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான காரியத்தை ஓபிஎஸ் டீம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனிடையே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கே.பி.முனுசாமியிடம் பேசிய போது வைரஸ் காய்ச்சல் காரணமாக தான் கூட்டத்துக்கு வர முடியவில்லையே தவிர வேறு காரணமில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

சட்டசபை கூட்டம்
2 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரிலேயே முகாமிட்டுள்ள கே.பி.முனுசாமி, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கவாவது சென்னை வருவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications