பழைய ஓய்வூதியத் திட்டம்! அரசு ஊழியர்களுக்கு பென்சன் வராதா? கருப்பு பேட்ஜுடன் தலைமை செயலக பணியாளர்கள்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக அரசு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் ஓய்வூதியக் குழுவானது, தன்னுடைய இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தலைமை செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து,9 மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அரசால் அமைக்கப்பட்டது.

பென்ஷன் எப்போது
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவானது, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்று கூட்டங்களை அக்குழு நடத்தியதுடன், தனது இடைக்கால அறிக்கையையும் தமிழக அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது.
அத்துடன், புள்ளி விவரம், தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் கூடுதலாக கலந்தாய்வுகள் நடத்த உள்ளதாலும், கூடுதல் அவகாசத்தை கேட்டிருந்தது. இதையடுத்து, ஓய்வூதியம் தொடர்பான குழுவுக்கு காலஅவகாசத்தையும் அரசு அளித்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.. ஓய்வூதியக்குழு தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக காட்டமாக கருத்து கூறியிருந்த அச்சங்கத்தினர், கருப்பு பேட்ஜ் அணிந்து அக்டோபர் 6ம் தேதி பணியில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றையும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தனர்.
மேலும், முதலமைச்சர் இந்த விஷயத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, உடனடியாக தலையிட்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தங்களது அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கருப்பு பேட்ஜூடன் பணி
அதன்படியே, தலைமைச் செயலகத்தில் நேற்று ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
அதன்படியே, நேற்று தலைமைச் செயலக பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.. தமிழக அரசுக்கும், குழுவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை செயலக சங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்றைய தினம் பணிபுரிந்தனர்..
இதில், அனைத்து வகை அலுவலர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மோசமான செயல்பாடு
இது சம்பந்தமாக தலைமை செயலக பணியாளர் ஒருவர் சொல்லும்போது, "ஓய்வூதியக் குழு அமைத்தபோதே, இந்தக் குழு தேவையற்றது என்று சொன்னோம்.. இப்போது இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது. இதை கண்டிக்கவே கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறோம்.
இப்போதாவது இதில் அரசு தலையிட்டு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் ஓய்வூதிய குழுவின் மோசமான செயல்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications