தமிழகத்தில் ஓமிக்ரான் முன்னெச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த "முக்கிய" உத்தரவு!
உருமாறிய கொரோனா ஓமிக்ரான் வைரஸ் பரவலைக் கண்காணிக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ கட்டமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் ஓமிக்ரான் என்ற பேரில், கொரோனா மூன்றாவது அலை தலைத்தூக்கியுள்ளது. ஒமைக்ரானை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ,சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

மருத்துவ கட்டமைப்பு
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ கட்டமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கட்டாய பரிசோதனை
அதேபோல் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுமாயின் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் உடனடியாக வழங்கவும், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு தனிமை
அத்துடன் அவர்களுடன் பயணம் செய்யும் சக பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நெகட்டிவ் என்று வந்தாலும் ஒரு வாரத்திற்கு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை சோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கண்காணிப்பு அவசியம்
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் அதிகரித்து தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
-
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications