தீபாவளி வேற நெருங்குதே.. சென்னை முடிச்சூர் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எப்போது திறக்கப்படும்? வெளியான தகவல்
சென்னை: சென்னையில் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வரும் நிலையில், ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முடிச்சூரில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சென்னையில் போக்குவாத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தற்போது பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் இருந்தது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்லவும் உள்ளேயே வசதி உள்ளது. ஆனாலும் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் பேருந்து நிலையத்திற்குள் போதிய வசதிகள் இல்லை. இதனால், ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் 42.7 கோடி செலவில் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 117 பஸ்கள் நிறுத்த முடியும். மேலும் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் 100 பணியாளர்கள் வரை தங்க முடியும். கடந்த சில மாதங்களாக ஆம்னி பஸ் நிலைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
தற்போது 95 சதவிகித பணிகள் முடிந்து விட்டது. ஆம்னி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை பிரதான சாலைகளில் இணைக்கும் வகையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு முன்பாக அதாவது இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆம்னி பஸ் நிலையத்தில் உணவகங்கள், கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன்.
பேருந்து நிலையம் கட்டுமான பணியின் போது அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால், தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் தரை தளம் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை காலத்தில் தண்ணீர் தேங்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. தீபாவளி நெரிசலை சமாளிக்கும் வகையில் அதற்கு முன்பே ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைத்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications