"ஒன்-வே".. இன்று முதல் மீண்டும் ஒருவழிபாதையாக மாறுகிறது சென்னையின் பிரதான சுரங்கபாதை.. அறிவிப்பு
ஹாரிங்டன் சாலை ஒருவழி பாதையாக மாறுகிறது
சென்னை: இன்று முதல் மறுபடியும் ஒருவழி பாதையாக மாறுகிறது சென்னை ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை... இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் மண்டலம் 107வது வார்டில், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை உள்ளது... இந்த சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சூளைமேடு பகுதிகளில் மக்கள் சென்று வருகின்றனர்...
Chennai Traffic alert: மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்நிறைந்த இந்த சாலை படுமோசமாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. மேலும், அந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள்
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னரே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது. அதேபோல, சென்னை சேத்துப்பட்டு - ஈவேரா சாலையை இணைக்கும் ஹாரிங்டன் சுரங்கப்பாதையில் வாகன நெரிசலை தடுக்க, கடந்த 2016-ல் ஆண்டு முதல் காலை, மாலை அதாவது கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் ஹாரிங்டன் சுரங்கப்பாதை ஒருவழிபாதையாக இருந்தது...

இரு வழி பாதை
இதனிடையே, கொரோனா தொற்றுக்கு பிறகு, சாலையில் வாகன எண்ணிக்கை குறைந்துவிட்டதால், கடந்த மார்ச் 2020 முதல் ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது சென்னையில் கொரோனா தொற்று வருவதாகவும், இயல்பு நிலைக்கு மக்கள் கொண்டிருப்பதாலும், மறுபடியும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..

அறிவிப்பு
எனவே இன்று முதல் மீண்டும் ஒரு வழி பாதையாக மாறுகிறது சென்னை ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை என்ற அறிவிப்பு சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியாகி உள்ளது.. அந்த அறிவிப்பில், "சென்னை ஹாரிங்டன் சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் ஒரு வழிபாதையாக இருக்கும்..

சுரங்கப்பாதை
இன்று முதல் ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்க கூடிய காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும் அதேபோல, மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரையும் ஒருவழிபாதையாக இருக்கும். மேலும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை சேத்துப்பட்டு சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வழியாக ஈவேரா சாலையை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது..

தடை
அத்தகைய வாகனங்கள் சேர்க்கப்பட்ட சந்திப்பில் இருந்து நேரடியாக மெக்கானிக்கல் சாலை குருசாமி மேம்பாலம் மற்றும் சந்திப்பு வழியாக செல்லலாம். அதேபோல மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஈவேரா சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வழியாக நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

யூ-டர்ன்
அத்தகைய வாகனங்கள் ஈவேரா சாலை மற்றும் ஹாரிங்டன் சாலை சந்திப்பில் இருந்து நேரடியாக ஈவேரா சாலை சந்திப்பு வலதுபுறம் திரும்பி டாக்டர் குமாரசாமி மேம்பாலம் வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம்.. மேலும், ஹாரிங்டன் சந்திப்பில் வசிக்கும் குடியிருப்புகளின் நன்மை கருதி ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வரை செல்லவும் யூ டர்ன் திரும்பவும் மேற்கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications