தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்களுக்கு வெறும் ரூ.1000.. நிதியை குறைத்த மத்திய அரசு! மிகப்பெரிய ஷாக்!
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் ரூ. 1000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை - மாமல்லபுரம் - கடலூர் இடையே 179 கி.மீ புதிய ரயில் பாதை அமைக்க வெறும் ரூ.1,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் பிங்க் புக் மூலம் நிதி குறைப்பு விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு புதிதாக எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான பிங்க் புக் வெளியாகி தமிழ்நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முழுமையான பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் அந்த நிதி ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
முக்கியமாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - மகாபலிபுரம் - கடலூர் இடையே 179 கி.மீ கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனி இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த 91 கி.மீ திட்டத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி- விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை - ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் நிதி குறைப்பு அம்பலமாகியுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க!












Click it and Unblock the Notifications