வசமா சிக்கிட்டாங்க! வாட்ஸப்பில் பாக்., ஆதரவு போஸ்ட்! 30 பேரை வளைத்த என்ஐஏ.. அதுவும் தமிழகத்தில்?
சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடியது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு செய்திகளை தமிழகத்தில் பரப்பியதாக கோவை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் இதில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் கப்பல் படை அதிகாரி உள்ளிட்டோறும் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது.

இதற்கிடையே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக, ஆயுதங்களுடன் தாக்கியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பல்வேறு நபர்களின் சமூக வலைதள கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருகிறது. யூட்யூப், எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வந்தவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8,000 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக பாகிஸ்தானுடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டதாக பிரபல யூட்யூபரான ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களை மத்திய அரசு கண்காணித்து வந்த நிலையில் இந்திய ராணுவ தகவல்களை ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட ஆறு பேர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ. தமிழகத்திலும் சிலர் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகளை பகிர்ந்ததை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தின் தென்காசி, ராமநாதபுரம், கோவை ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்கள் பல்வேறு வாட்ஸாப் குழுக்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து மத்திய அரசின் உத்தரவுப்படி என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 30 பேர் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களை வாட்ஸாப் குழுக்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து கோவை, தென்காசி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல்வேறு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனவும் கண்காணித்து வருகின்றனர். விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications