நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டசபையிலிருந்து பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் வெளிநடப்பு
சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்தார். மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி, மசோதாவை தாக்கல் செய்து, அதை ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுத்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழக சிறப்பு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியுள்ளது. இதில் ஆளுநரின் கடிதத்தில் உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை. யூகங்களின் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சபாநாயகர் அப்பாவு முழுமையாக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விளக்கத்தை வாசித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார். மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், நீட் தேர்வை தமிழகம் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
தன்னிச்சையாக ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியது என்பது சரியான முடிவு அல்ல. பொது மக்களிடம் கருத்து கேட்டபிறகே நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது; அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல.
கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. மட்டுமல்லாது இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.
Recommended Video
நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் நான்கு பேரும் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications