திருச்சி டூ தென்காசி.. சிவகங்கையில் நாளை “படை திரட்டும்” பன்னீர்! வெளியான “சவுத்” தலைகள் லிஸ்ட்
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நாளை அஞ்சலி செலுத்தும் ஓ பன்னீர்செல்வம் அங்கு தனது மொத்த பலத்தையும் காட்ட உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்ட இறுதி வரை ஆயுதம் தாங்கி போராடி, வீர மரணம் அடைந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த பெரிய மருது, சின்ன மருது என்றழைக்கப்படும் மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு 27-10-2022 (வியாழக்கிழமை) அன்று காலை 10-30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

வைத்திலிங்கம்
இந்நிகழ்வில், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கு.ப. கிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. வெல்லமண்டி என். நடராஜன் கலந்துகொள்வார்கள்.

ஓ.பி.ரவீந்திரநாத்
மக்களவை உறுப்பினரும், தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளருமான திரு. ப.ரவீந்திரநாத், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. அய்யப்பன், திரு. வா. புகழேந்தி, கழக செய்தி தொடர்பாளர் திரு. மருது அழகுராஜ், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர். தர்மர், தேனி மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.பி.எம். சையதுகான், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். கோபாலகிருஷ்ணன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மேலூர் திரு. எஸ்.ஏ. பாஸ்கரன், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கே. முருகேசன், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஜி.ஆர். ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ரத்தினசபாபதி
அதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.பி. பசும்பொன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ப. சுப்பிரமணியன், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வைகை பாலன், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஜெ. பாலகங்காதரன், விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. அ. தெய்வம், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.எஸ். கதிரவன், திருச்சி புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ். ரத்தினவேல், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம்.ஆர். ராஜ்மோகன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பி. சாமிக்கண்ணு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ராஜே. ராஜசேகரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. இ.ஏ. இரத்தினசபாபதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. டி.ஜி. கலைச்செல்வம், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. என். சிவலிங்கமுத்து, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர். இராமகிருஷ்ணன் (எ) மூர்த்தி பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வி.கே. கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கே.ஆர். அசோகன் அவர்கள் மேற்கொள்வார்.

திருச்சி டூ தென்காசி
மேற்படி நிகழ்ச்சியில், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் தெற்கு, திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மத்திய, விருதுநகர் மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை கிழக்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மேற்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் வடக்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications