இந்து முன்னணிக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ்! பெரியார், அண்ணாவை விமர்சித்த வீடியோவுக்கு சூடாக பதிலடி!
சென்னை: மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது கடும் விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டை நடத்திய இந்து முன்னணிக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்ற போது, அதனை எதிர்த்து அண்ணா பெயரில் அண்ணா திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கி கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொறித்து தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைத்தவர் எம்ஜிஆர். அவரைத் தொடர்ந்து அண்ணா காட்டிய வழியில் 4 முறை அதிமுக ஆட்சியை அமைத்தவர் ஜெயலலிதா.
தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள்' மாநாடு என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது." எனத் தெரிவித்துள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications