சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக பொதுக்குழு..! நீதிமன்ற படிக்கட்டேறிய ஓபிஎஸ்! முறையீட்டை ஏற்ற நீதிபதி..! நாளையே விசாரணை!

Google Oneindia Tamil News

சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது காவல்துறை நீதிமன்றம் என பல்வேறு கட்டங்களை சந்தித்து வருகிறது

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

இந்நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தண்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நேற்று வழக்கு தொடர்ந்தார்.

இரு நீதிபதிகள் கருத்து

இரு நீதிபதிகள் கருத்து

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர் .

ஓ.பன்னீர்செல்வம் மனு

ஓ.பன்னீர்செல்வம் மனு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை விசாரணை

நாளை விசாரணை

அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவை தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு வைத்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

English summary
Aiadmk Coordinator O. Panneerselvam has filed a case seeking a ban on the AIADMK General Committee to be held on July 11, Madras High Court Single Judge Krishnan Ramasamy has approved to hear the case tomorrow as an emergency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X