ஒன்னும் பண்ண முடியாது! ஆணியடித்தது போல் உட்கார்ந்த ஓபிஎஸ்! எடப்பாடிக்கு முளைத்த சிக்கல்! பாவம் அவரு!
சென்னை : சட்டசபையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் இடையேயான மோதலை விட அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக யார் அமர போகிறார் என்பதுதான் தற்போது விவாதம் ஆகி இருக்கிறது சபாநாயகர் வரை சென்றும் எடப்பாடி தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கூட்டம் தொடங்கியது.
மரபுகளின் படி ஆளுநர் உரையோடு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் எதிர்பார்த்தது போலவே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு இதுவரை இல்லாத அளவு எதிர்ப்பு தெரிவித்தன.

ஆளுநர் உரை
காலை 10 மணி அளவில் ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபைக்கு வருகை தந்த நிலையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பின்னர் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் ஏற்கனவே மோதல் போக்கை கையாண்டு வரும் ஆளுநர் தமிழ்நாடு தமிழகம் குறித்த பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் உரைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கூட்டணி கட்சியினர் வெளி நடப்பு செய்தனர். மேலும் ஆளுநர் வெளிநடப்பு செய்தது இதுவரை நடந்திராத ஒன்று.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
நேற்று தமிழக சட்டசபை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் சட்டசபையை மையமாக வைத்து பல்வேறு விவகாரங்கள் இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தான் தற்போது உச்சத்தில் இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு முன்னாள் அமைச்சர் ஆன அறிக்கை உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஆனால் கடந்த கூட்டத்தொடரின் போது மரபுப்படி ஓ.பன்னீர் செல்வத்துக்கே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒதுக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த கூட்டத் தொடரிலும் ஓபிஎஸ்க்கே எதிர்க் கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் அவ்வணி கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக சபாநாயகரிடம் முறையிட்டும் உரிய முடிவெடுக்கப்படவில்லை. இதனால் தான் கருப்புச் சட்டையுடன் வந்தனர் அதிமுகவினர்.

எடப்பாடி அதிருப்தி
அதே நேரத்தில் இந்த கூட்டத் தொடர் 13ஆம் தேதி வரை ஓபிஎஸ் எதிர்க் கட்சி துணை தலைவராகவே இருப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் தற்போதைய தேர்தல் ஆணைய தகவல்கள் படி அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க் கட்சி துணை தலைவராகவும் தொடர்கிறார். அதனை மையமாக வைத்தே சபாநாயகர் ஓபிஎஸ்ஸை அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அவரே தொடரப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்பு சட்டை
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிருப்தியடைந்துள்ளது. சட்டசபை நிகழ்வுகளை பொருத்தவரை இருக்கை ஒதுக்கீடு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி உள்ளிட்டவை சபாநாயகரின் முடிவுக்கு உட்பட்டதாகும். எனவே இதுகுறித்து நீதிமன்றத்திலும் முறையிட முடியாது. மேலும் அதற்கான கால அவகாசமும் தற்போது இல்லை என்பதால் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய கருப்பு சட்டை அணிந்து வர முடிவு செய்திருந்தனர். அதேபோலவே தற்போதும் அவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கின்றனர். ஏற்கனவே சட்டசபை நிகழ்வுகளை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என்பதால் வேறு வழியின்றி கருப்பு சட்டையோடு அதிமுகவினர் வந்திருப்பதாக முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications