சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாருங்க, ஓபிஎஸ்சின் 'முக்கிய' கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.. வெற்றி எடப்பாடிக்கே: இன்பதுரை

அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது என்று இன்பதுரை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் ஏ பார்ம், பி பார்ம்களில் நாங்கள் கையெழுத்திடுகிறோம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது என்று இன்பதுரை கூறியுள்ளார்.

அதிமுக வழக்கறிஞரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான இன்பதுரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கூறியதாவது: அதிமுக எடப்பாடி பக்கம் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. சென்னை டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பு அமலில் இருக்கும் போது அந்த தீர்ப்பை ஏன் எடுத்துக்கொண்டு இணையத்தளத்தில் பொதுக்குழுவின் தீர்மானங்களை ஏன் பதிவேற்றம் செய்யவில்லை என்று கேட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் நீதிமன்றம் அவர்களாகவே முன் வந்து ஒரு தீர்வை சொன்னார்கள்.

OPS Prayer Rejected, Edappadi is the Aiadmk: What was said in the SC verdict - Inbadurai

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தேர்தலில் போட்டியிட விடாமல் முடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. சின்னத்தை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியது. எனவே சின்னத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக நாங்கள் ஒரு தீர்வை அளிப்பதாக சொன்னார்கள். எடப்பாடி அறிவித்த வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஏ பார்ம், பி பார்ம்களில் நாங்கள் கையெழுத்திடுகிறோம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஓபிஎஸ் தரப்புக்கு செக் வைத்த சிவி சண்முகம்.. பொதுக்குழுவை நேரில் கூட்டாமலே கருத்தையறியலாம் என பேட்டிஓபிஎஸ் தரப்புக்கு செக் வைத்த சிவி சண்முகம்.. பொதுக்குழுவை நேரில் கூட்டாமலே கருத்தையறியலாம் என பேட்டி

அதிமுக வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவரது பெயரை ஒரு சுற்றறிக்கையில் எழுதி பொதுக்குழு உறுப்பினர்களுடைய கையொப்பம் இட்ட ஆதரவை பெற வேண்டும். பொதுக்குழுவை கூட்ட நேரம் இல்லை. எனவே சுற்றறிக்கையை தயார் செய்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதை அனுப்பி அவர்களுடைய ஆதரவு கையொப்பத்தை பெற்று அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் பெருவாரியான ஆதரவை பெறும் வேட்பாளருக்கு அவைத்தலைவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆனையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Inpadurai said that the court verdict has confirmed that AIADMK is on Edappadi's side and the court refused to accept the OPS side's statement that we are signing the A Form and B Forms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X