செஞ்ச வினை ஓபிஎஸ்ஸை துரத்துது.. பகலில் தர்மயுத்தம்.. இரவில் ரகசிய மீட்டிங்.. போட்டு உடைத்த கேசிபி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக் கொடி, பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஓபிஎஸ்ஸுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ள நிலையில், ஓபிஎஸ் செய்த வினைகளே இன்று அவரைத் துரத்துகிறது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. தன்னை திரண்ட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்ததற்கான பலனை ஓபிஎஸ் அனுபவிக்கிறார் எனக் கூறியுள்ளார் கேசி பழனிச்சாமி.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய நிலையில், அவர் கட்சி பெயர், கொடியை பயன்படுத்துவதை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ஏற்கனவே, சசிகலா, கேசி பழனிசாமி ஆகியோர் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதைப் போல, ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக கட்சி பெயரையும், கொடியையும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருமே தங்கள் அணியை வலுப்படுத்தும் வகையில் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அதிரடி காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகளை நியமித்து மாவட்ட செயலாளர்களை கூட்டத்தையும் நேற்று முன்தினம் நடத்தி முடித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

எடப்பாடிக்கு அங்கீகாரம்?
எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா? என சவால் விடுத்த ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக ஈபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

லீகல் நோட்டீஸ்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு செக் வைக்கும் விதமாக லீகல் நோட்டீஸ் அனுப்பியது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர் நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். கட்சியின் பொறுப்பு ஈபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது சட்டத்தை மீறுவதாகும் லீகல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நோட்டீஸிற்கு உடனடியாக ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு பேரிடி
ஓபிஎஸ் தரப்பு மா.செக்கள் கூட்டத்தை நடத்திய நிலையில் அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் வக்கீல் நோட்டீஸ் என இரண்டு பேரிடிகள் இறங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு அறிக்கை மூலம், சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தீவிரமாக இறங்கியுள்ளது எடப்பாடி அணி. முழுமையாக ஓபிஎஸ்ஸிடம் இருந்து அதிமுகவை பறிக்கும் திட்டத்தோடு ஈபிஎஸ் அணி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே, சசிகலா, கேசி பழனிசாமி ஆகியோர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவதை ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தடுத்தனர்.

முட்டுக்கட்டை
இந்நிலையில், ஓபிஎஸ்ஸே கட்சி கொடியை பயன்படுத்த முட்டுக்கட்டை போட்டுள்ளார் எடப்பாடி. இந்த நோட்டீஸுக்கு ஓபிஎஸ் உரிய பதில் அளிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடுவார். இதனால், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். தற்போது கட்சி நிர்வாகிகள் நியமனங்கள் மேற்கொண்டு வருவதற்கும் சிக்கல் நேரும், இது பிரதான வழக்கிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்படுத்தக்கூடும்.

சசிகலாவுக்கு தடை
சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்ததும், அதிமுக கொடி கட்டிய காரில் பயணித்தார். சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என அதிமுகவினர் பலரும் தெரிவித்து வந்த சூழலில், அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக டிஜிபியை சந்தித்து அப்போதைய அமைச்சர்கள் புகார் அளித்தனர். சசிகலா காரில் அதிமுக கொடி இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் புகார் அளித்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓபிஎஸ் தான்.

கேசிபி கைது
அதேபோல, அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு பாஜகவை விமர்சித்துப் பேசியதற்காக கேசி பழனிசாமியை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து கட்சியை விட்டு நீக்கிய நிலையில், அவர் கட்சி பெயரையும், அதிமுக கொடியையும் பயன்படுத்தினார், போலியாக இணையதளத்தை உருவாக்கி ஆட்கள் சேர்த்தார், கட்சியின் சின்னத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என அதிமுகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பார்.

விதைத்த வினைகளை அறுவடை செய்கிறார்
இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு, எடப்பாடி பழனிசாமி கிடுக்கிப்பிடி போட்டுள்ளது பற்றிப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. என் மீது இதேபோல வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியபோது ஓ.பன்னீர்செல்வம் சரி என்று தானே சொன்னார். இன்று அவருக்கே வினை திரும்பி வந்துள்ளது. தர்மயுத்தம் காலத்தில், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கக்கூடாது என வசனம் பேசினார் ஓபிஎஸ். இன்று தனது மகனை அமைச்சராக விடாமல் தடுத்தார் எடப்பாடி பழனிசாமி எனப் பேசுகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ் செய்த வினைகள் இன்று அவரைத் துரத்துகிறது. அவர் செய்த பாவங்கள் இன்று அவரையே பயமுறுத்துகிறது.

நட்டாற்றில் விட்டுவிட்டு
தர்மயுத்தம் காலத்தில் ஓபிஎஸ்ஸை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அணி திரண்டார்கள். தனக்கு ஒரு பதவி கிடைத்ததும் அவ்வளவு பேரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்துவிட்டார். ஒரு நாள் முழுக்க ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கடைசியில் டிவியில் பார்த்தால், தங்கமணி, வேலுமணியோடு ஒரு மருத்துவமனையில் நாடகமாடி பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார். அந்த காலகட்டத்திலேயே பகலில் தர்மயுத்தமும், இரவில் டிடிவி தினகரனோடு சந்திப்பும் நடத்திக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். தனது சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்தியவருக்கு கட்சியை விட்டே துரத்தப்படும் நிலை வந்துள்ளது என விமர்சித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications