’குரூப்ல டூப்’ 51-க்கு நடுவே மறைந்து இருக்கும் 15.. 5 செகண்ட் தான் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) புதிர் படத்தில், வரிசையாக 51 என்ற எண்கள் உள்ளன. இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 15 என்ற எண் மறைந்துள்ளது. குரூப்ல டூப் போல மறைந்து இருக்கும் அந்த இமேஜ்க்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும். 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. செஸ் விளையாடும் போதும் எப்படி மூளையை கசக்கி பிழியவைக்குமோ, அதுபோல இல்யூஷன் புதிர் விளையாட்டுகளும் மூளைக்கு வேலை வைப்பவை. ஒருவரின் சிந்தனைத்திறன், கவனிப்புத்திறன் உள்ளிட்டவற்றை கூட இந்த இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்கும் வேகத்தை வைத்து கணக்கிட முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ரொம்பவே எளிதானது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை நன்றாக பாருங்கள். இங்கே வரிசையாக 51 என்ற எண்கள் உள்ளன. இதில், ஒரே ஒரு எண் மட்டும் மாறுபட்டுள்ளது. அதாவது 51 என்ற எண்களுக்கு நடுவே 15 என்ற எண்ணும் உள்ளது. 15 என்ற எண் ஒரே ஒரு இடத்தில் மட்டும் உள்ளது.
"குரூப்பில் டூப்" என்பது போல 51 களுக்குள் 15 என்ற எண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க். அதுவும் வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். சவாலுக்கு நீங்க ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1, 2, 3, 4, 5... ஓகே, டைம் முடிந்தது! சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் அதற்கான விடையை கீழே எழுதுங்கள். டாப் 10-க்குள் யார் வருகிறார்கள் என்று பார்ப்போம்!
அதெல்லாம் இருக்கட்டும். இந்த இமேஜை நன்றாக பார்த்துவிட்டேன், ஆனால் விடை கண்ணுக்கே தெரியவில்லையே என்று படத்தை வெறித்து பார்ப்பவர்களா நீங்கள்? கொஞ்சம் கூடுதல் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதும் விடை தெரியவில்லையா? நாங்களே உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்... படத்திற்கான விடையை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று மேலோட்டமாக பார்க்க வேண்டாம்.
கொஞ்சம் ஆழ்ந்து, படத்தை நன்றாக உற்று பாருங்கள். இப்போது விடையை கண்டுபிடித்துவிட முடியும். கூடுதலாக 5 விநாடி எடுத்துக்கொள்ளுங்கள்... 51 களுக்குள் 15 எங்கே ஒளிந்து இருக்கிறது என்பதை இப்போது 90 சதவீதம் பேர் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு உள்ளது. இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறீர்களா? எளிதான ஒரு டிப்ஸ் படத்தின் வலது பக்கத்தில் விடை இல்லை.

இடது பக்கம் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இப்போது எளிதாக விடையை கண்டுபிடிக்க முடியும். இப்போதும் கூட விடையை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். மூன்றாவது வரிசையில், கீழிருந்து மேலாக பாருங்கள். படத்திற்கான விடை அங்கேதான் ஒளிந்துள்ளது. விடையை கண்டுபிடித்தவர்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications