ஆப்டிகல் இல்யூஷன்: மகுடி ஊதி பாம்பாட்டி தேடும் பாம்பு.. படத்தில் எங்கே இருக்கு? கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய சிகரெட் அட்டைகளில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மறைந்துள்ள பாம்பை 5 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்.

நமது கண்களை குழப்பி மூளைக்கு வேலை வைக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு தங்கள் திறனையும் அறிவுக்கூர்மையையும் சோதிக்கும் வகையில் இந்த படங்கள் அமைந்து இருப்பதால் இந்த இல்யூஷன் படங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

நேரம் போறதே தெரியலயே..

நேரம் போறதே தெரியலயே..

பொதுவாக இல்யூஷன் படங்கள் என்றால் பார்ப்பதற்கு முதலில் எளிதாக தோன்றும். ஆனால், நமக்கு கொடுத்து இருக்கும் டாஸ்க்கை கண்டுபிடிபதற்குள் ஒரு வழியாகி விடுவோம் என்றே சொல்லலாம். அதிலும் சில இல்யூஷன் படங்கள் எல்லாம் தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு குழப்பி விட்டு விடுகின்றன. இல்யூஷன் படங்களில் மூழ்கி விட்டால் நேரம் போறதே தெரியலயே... என்று நினைக்கும் அளவுக்கு நம்மை மூழ்கடித்து விடும் என்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இல்யூஷன் படங்கள்

இல்யூஷன் படங்கள்

வெறும் இணையம் மட்டும் அல்ல.. சில தேர்வுகளில் கூட அறிவுத்திறனை இப்போது இல்யூஷன் படங்கள் ஆக்கிரமிப்பதாக சொல்கிறார்கள். நேர்முகத்தேர்வில் கூட சில சமயங்களில் இல்யூஷன் படங்கள் கேட்டு அறிவுக்கூர்மையையும்.. குணாதிசயங்களையும் பரிசோதிக்கபடுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நாமும் இன்று இங்கே ஒரு இல்யூஷன் படங்களை பார்க்கலாம்.

சிகரெட் அட்டைகளில் இந்த படம்

சிகரெட் அட்டைகளில் இந்த படம்

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் 1920 கால கட்டங்களில் உள்ளது. சிகரெட் அட்டைகளில் இந்த படம் இடம் பெற்றிருந்ததாம். 1950-கள் வரை சிகரெட் அட்டைகளில் இப்படி கவரும் வகையிலான படங்களை அச்சிட்டு வெளியிட்டுவதற்கு அனுமதி இருந்து இருக்கிறது. இதனால் புகை பிடிப்பவர்களை கவர்வதற்காக இப்படி வித விதமாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களில் அட்டை படங்களில் இப்படி வித்தியாசத்தை காட்டியிருப்பதாக தெரிகிறது.

பாம்பாட்டியின்

பாம்பாட்டியின்

சரி அதை விடுங்க... இந்ந படத்தில் என்ன டாஸ்க் என்றுதானே நினைக்கிறீர்கள்.... டாஸ்க் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு பாம்பாட்டி உள்ளார். அவர் ஒரு மகுடியையும் வைத்துக் கொண்டு இருக்கிறார். வழக்கமாக பாம்புகளை பிடிப்பதற்குதான் பாம்பாட்டிகளை அழைத்து வருவதாக சொல்வார். அப்படித்தான் இங்கேயும் அவர் அமர்ந்து இருக்கிறார். இந்த படத்திற்குள் ஒளிந்து இருக்கும் பாம்பை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்..

5 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா

5 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா

அதுவும் வெறும் 5 நொடிகளில் கண்டுபிடித்து விட வேண்டும்..என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. கண்டுபிடிச்சிட்டீங்களா... 5 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா உண்மையில் நீங்க கிரேட் தான்... சரி கண்டுபிடிக்கதவங்க கவலைப்பட வேண்டாம்.. நாங்க டிப்ஸ் தர்றோம். அதை வச்சி ஈசியா கண்டுபிடிச்சிடலாம். பாம்பை படத்தில் மூலை முடுக்கெல்லாம் தேடிட்டு இருக்காதீங்க..

வட்டம் போட்டு..

வட்டம் போட்டு..

பாம்பாட்டியின் மீதுதான் பாம்பு இருக்கு... எனவே உங்க போகசை அங்கே கொடுங்க... இப்போதும் கண்டுபிடிக்கவில்லைன்ன.. நாங்களே விடையை சொல்லிடுறோம்.. பாம்பாட்டியின் இடது கையில் பாம்பு வளைந்து நெளிந்து இருக்கிறது. படத்தில் வட்டம் போட்டு விடையை காட்டியிருக்கோம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+