காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்.. பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி அளித்த உத்தரவு ரத்து
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ சைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலை பிரிவினர் மட்டும் வாழி திருநாமம் மற்றும் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாட அனுமதியளித்து கோயிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறபிப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வடகலை பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசரித்த உயர் நீதிமன்றம், "முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னால் வடகலை பிரிவினர் மற்றும் சாதாரண பக்தர்களும் அமர வேண்டும். தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைலேச தயாபாத்திரமும், அதன்பிறகு வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரமும் 10 முதல் 12 வினாடிகள் பாட வேண்டும்.
இதைதொடர்ந்து தென்கலை, வடகலை மற்றும் பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒன்றாக பாட வேண்டும். இதன்பின்னர், நிறைவாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித்திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகன் வாழித்திருநாமமும் பாட வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன்பெஞ்ச், கடந்த 1910, 1915, 1963 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், வரதராஜ பெருமாள் முன்பாக ஸ்ரீ சைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் காஞ்சீபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது.
வடகலை பிரிவினருக்கு இந்த உரிமை நிலைநாட்டப்படவில்லை. எனவே, இருதரப்பும் சேர்ந்து ஒன்றாக பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று தீர்ப்பளித்தது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications