"ஆறில் ஒன்று.." ப.சிதம்பரத்திற்கு திமுகவிலிருந்து ஸ்வீட் நியூஸ்..? சுறுசுறு ஜூன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலின்போது போட்டியிட ப.சிதம்பரம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதத்தில் தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

2016-ஜூனில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், விஜயக்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், திமுக சார்பில் டி.கே.ஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

 ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தல்

இதில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்டு ஜெயித்ததால் தனது எம்.பி. பதவிகளை கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் ராஜினாமா செய்தனர். இந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தல் கடந்த செப்டம்பரில் நடந்தது. இதில் வைத்தியலிங்கத்தால் காலியான இடத்துக்கு ராஜேஷ்குமாரையும், கே.பி.முனுசாமியால் காலியான இடத்துக்கு டாக்டர் கனிமொழியையும் திமுக நிறுத்தி போட்டியின்றி வெற்றிபெற வைத்தது. வைத்தியலிங்கத்தின் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜேஷ்குமாரின் ராஜ்யசபா பதவி காலம் ஜூனில் முடிவடைகிறது.

மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிரா தேர்தல்

அந்த வகையில் தமிழகத்தில் 6 இடங்களுக்கு ஜூனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு இருக்கும் வலிமையை பொறுத்து திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடத்தையும் பிடிக்க வாய்ப்புண்டு. அதேபோல, மகாராஷ்ட்டிராவிலும் 6 இடங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.

ஜூனில் பதவிக் காலம் முடியும்

ஜூனில் பதவிக் காலம் முடியும்

கடந்த 2016 ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் மகாராஸ்ட்ரா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம். அவரது பதவி காலம் ஜூனில் முடிவடைகிறது. மீண்டும் மகாராஷ்ட்டிராவிலிருந்து ப.சிதம்பரம், தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்பதற்கு உறுதியில்லை.

ப.சிதம்பரம் திட்டம்

ப.சிதம்பரம் திட்டம்


தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில் திமுக ஆதரவுடன் ஒரு இடத்தை தனக்காக கைப்பற்றவும் ப.சிதம்பரம் திட்டமிடுகிறாராம். காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 6வது சீட்டை கைப்பற்ற திமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்காக திமுகவிடம் சீட் கேட்க சோனியாவை சிதம்பரம் அணுகி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+