நீதித்துறை என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டுமல்ல.. மோடிக்கு பி.வில்சன் வலியுறுத்தல்!
சென்னை: நீதிபதிகள் நியமனத்தில், ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லை என்று பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில், நீதிபதிகளின் நியமனத்தில் குறைந்து வரும் பிரதிநிதித்துவம் கவலையளிப்பதாக திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்தியாவின் தன்மை
இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத வகையில் உயர் நீதிமன்றங்களில் பன்முகத்தன்மைப் பற்றாக்குறை உள்ளது.
உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு சமூக குழுக்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனச் செயல்முறையில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுகிறது. கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் OBC, SC மற்றும் ST சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் வழங்கிய தரவுகளைக் கண்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.
யார் யார் எத்தனை சதவிகிதம்?
01.01.2021 முதல் 30.01.2026 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் SC சமூகத்தையும், 14 பேர் ST சமூகத்தையும், 80 பேர் OBC சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
சதவீத அடிப்படையில் பார்த்தால்,
2021 - 2026 (மொத்த நீதிபதிகள்: 593)
• SC: 4.38% (26)
• ST: 2.36% (14)
• OBC: 13.49% (80)
• FC: 79.76% (473)
2018-2024 வரையிலான நியமனம்
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரிடம் இதே விவகாரம் குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, 2018 முதல் 2024 வரை நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தொடர்பான தரவுகள் என்னிடம் வழங்கப்பட்டன. அவையும் தற்போதைய தரவுகளைப் போலவே மிக மோசமாக இருந்தது. 2018 முதல் 30.10.2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 684 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
• SC: 3.07% (21)
• ST: 2.05% (14)
• OBC: 11.99% (82)
• மற்றவை: 82.89% (567)
இதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் போகலாம் என்பதும், அதன் விளைவாக அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதும் உணர்த்தப்படுகிறது.
அணுகுமுறை
குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த, ஒரு படித்தான பின்புலம் கொண்ட நீதிபதிகள் மட்டுமே நீதித்துறையில் இருப்பது, சமூகத்தின் பன்முகத்தன்மை கொண்ட மதிப்புகளையும், விழுமியங்களையும் பிரதிபலிக்காது என்பது மக்களின் கவலையாக உள்ளது. குறிப்பாக, கலாச்சாரம் மற்றும் தலைமுறை வேறுபாடு சார்ந்த விவகாரங்களில், அவர்கள் சட்டங்களைச் சமூகப் பார்வையோடு அணுகாமல் தங்களின் சொந்த சமூக-பண்பாட்டு பின்னணியை அடிப்படையாகக் கொண்டு அணுகும் சூழல் நிலவுகிறது.
பாரபட்சமான முடிவு
பன்முகத்தன்மை வாய்ந்த நீதித்துறை என்பது இன்றியமையாதது. அது இல்லையெனில், போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகக் குழுக்களின் உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதனூடாக பாகுபாடு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து நீதிபதிகள் இல்லாதிருப்பது உணர்த்துவது என்னவென்றால், இது தகுதி இல்லாமையாலோ அல்லது ஆட்கள் கிடைக்காததாலோ ஏற்பட்ட பற்றாக்குறை அல்ல, மாறாக அவர்களை நீதித்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட திட்டமிட்ட பாரபட்சமான முடிவே ஆகும்.
குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரின் அதீதப் பிரதிநிதித்துவம், தற்போதைய கொலிஜியம் அமைப்பின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்குவதோடு, சமூகப் பிரிவினைகளைக் கடந்து நீதிபதிகளைத் தேர்வு செய்வதில் அந்த அமைப்பு தோல்வி அடைந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது.
மோடியிடம் வலியுறுத்தல்
உயர்நீதித்துறை என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டுமல்ல. ஆகவே, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் OBC / SC / ST சமூகங்களுக்கு மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மை உறுதி செய்யப்படவும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
-
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications