சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூட்டு தல" பிரச்சினையில் பிரசிடென்சி மாணவன் தற்கொலை.. பச்சையப்பா’ஸ் மாணவன் கைது

Google Oneindia Tamil News

சென்னை: "ரூட்டு தல " பிரச்சினையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கேலி செய்து அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதனால் அவமானம் தாங்காத மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் பிச்சை போட்ட உயிர் தேவையில்லை என ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டை அருகே பஜார் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான குமார் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றபின் மீண்டும் சென்னையில் இருந்து ரயில் மூலம் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி

அப்போது அதே ரயிலில் பயணம் செய்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரை ரூட்டு தல பிரச்சனையில் தாக்கியுள்ளனர். ரயிலில் தனியே அழைத்துச் சென்று அடித்து உதைத்த தோடு கேலி கிண்டல் செய்தாலும் செய்தனர் மேலும் குமாரி நண்பர்களுக்கு உங்க ஆள் எங்களிடம் சிக்கிட்டான் அவனை வந்து முடிஞ்சா காப்பாத்தி கூட்டிட்டு போங்க என ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

 கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

தன்னை அடித்து கேலி கிண்டல் செய்ததோடு தனது நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ்ஜும் அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான குமார் தனது நண்பர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பினார். அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சையில் நான் உயிர் வாழ முடியாது நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கூறி சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.

 மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

மாணவர் குமார் உயிரிழந்த தகவல் பரவியதை அடுத்து மருத்துவமனைக்கு முன்னாள் மாநில கல்லூரி மாணவர்களும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடி, குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ரோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மாணவர்கள் மற்றும் குமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர்.

 போலீசார் வழக்குப் பதிவு

போலீசார் வழக்குப் பதிவு

இந்த நிலையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தியபோது குமாருக்கு சிலர் தொல்லை கொடுத்தது வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் குமாரை அடித்து துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரனை மேற்கொண்டன.

 பச்சையப்பா கல்லூரி மாணவன் கைது

பச்சையப்பா கல்லூரி மாணவன் கைது

இந்நிலையில் குமாரின் நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய பச்சையப்பா கல்லூரி மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருடன் ரயிலில் பயணித்த மற்ற மாணவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று சென்னை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Police have arrested a Pachaiyappan College student in connection with the incident where a state college student committed suicide by falling in front of a train after being mocked and beaten by Pachaiyappan College students over the "root head" issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X