பாகிஸ்தானை காலி செய்யும் தண்ணீர் பஞ்சம்.. ஐநாவில் கிழித்து தொங்க விட்ட இந்தியா.. சவுக்கடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சர்வதேச மன்றங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரின் விமர்சனங்களுக்கு இந்தியா தற்போது கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது.

ஐநாவில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். தண்ணீர் என்பது பாகிஸ்தானின் வாழ்வாதாரம். 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இது. அவர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அதை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. பாகிஸ்தானின் அஸ்திவாரம் அதை நம்பி இருக்கிறது.

இந்தியா அற்ப விஷயங்களில் அரசியல் செய்கிறது. அரசியல் லாபத்திற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள். பாகிஸ்தானின் சிவப்பு கோட்டை இந்தியா தாண்டிவிட்டது. இந்தியாவின் செயலை ஏற்க முடியாது. சர்வதேச விதிகளை மீறி இந்தியா இப்படியான தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருக்கிறது.

Pakistan is acting India rips Islamabad in the UN on the Indus treaty Valley contract

இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துகிறது. தண்ணீரை வைத்து எம்மக்களை சிறைபிடிக்க பார்க்கிறது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என்று பாகிஸ்தான் பிரதமர் பேசி இருந்தார்.

பதிலடி

இதற்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அரசு சார்பாக அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பேசுகையில், பாகிஸ்தான்தான் விதிகளை மீறியது. தீவிரவாதம் செய்வதே மேற்கண்ட விதிக்கு எதிரானதுதான். அதை செய்யும் நொடியே பாகிஸ்தான் விதிகளை மீறிவிட்டது என்றுதான் அர்த்தம். பாகிஸ்தான் இப்போது சர்வதேச அரங்கில் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது.

அவர்கள் கஷ்டப்படுவது போல நாடகம் ஆடுகிறார்கள். தீவிரவாதத்தை ஆதரிக்கும் போது அவர்கள் அதை கவனித்து இருக்க வேண்டும். பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம் தவறானது. பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறிவிட்டதைத்தான் இது காட்டுகிறது. ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான், பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சம்

1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+